A+ A-

இந்தியாவில் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகள்





இந்தியாவில் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்தி ய அரசியலமைப்பின் பகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது,

ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக்கோ ரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்ற முறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்ப டை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்தி ரமாக அனுபவிக்க கடமைபட்டவர்க ளாவர். 

இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடி ன்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்து க் குடிமக்களும் அனுபவிக்க கடமை பட்டவர்களாவர். இவைகள் மறுக்க ப்படும்போது நீதிமன்றங்கள் தலை யிட்டு அவற்றை பெற்றுத்தர தயங் காது.



இந்த அடிப்படை உரிமைகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசிய லமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து இங்கு உருவாக் கப்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை, மனித னின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். அடிப் படை உரிமையை, நெருக்கடி கால அறிவிப்பின் மூலம், குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.

ஆறு அடிப்படை உரிமைகளாவன

1. சம உரிமை

2. சுதந்திர உரிமை

3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை

4. சமய சார்பு உரிமை

5. கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை

6. அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை.

இந்தியாவில் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்தி ய அரசியலமைப்பின் பகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது, ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக்கோ ரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.