A+ A-

கல்வி உரிமைச்சட்ட‍ம்( Right to Education) ..........

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி
யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல குறைபாடுகள் உள் ளன. 

கல்வி உரிமைச்சட்ட‍ம்
இருந்த போதிலும் ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெற வேண் டும் என் பது பொது அறிவு உலகத்தின் விருப் பம். அந்த வகையில் கல்விக்கான உரி மைச் சட்டத்தை முறையாக அமுல்ப டுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனை த்து குழந்தை களுக்கும் கல்வி அளிக் கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண் டு ஆகஸ்ட் மாதம் இலவச – கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நிய மனம், பள்ளிகளுக்கு அங்கீ காரம், ஆசிரியர்- மாணவர் விகிதாச் சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு இனங் களில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந் த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீ த இடங்களை ஒதுக்க வே ண்டும். 


கல்வி உரிமைச்சட்ட‍ம்
அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், எல்.கே.ஜி. உள் பட கீழ்நிலை வகுப்பு களில் மாணவர் களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத் தக்கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த குழந்தையையும் ஃபெயில் ஆக் கக்கூடாது. அவர்களை அடிக்கக்கூடா து. மனரீதியாக துன்பு றுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மத் திய அரசு கொண் டுவந்த இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


இந்த நிலையில், மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச் சட்ட த்தை அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு விதி முறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர் பாக அரசிதழில் வெளியான விவர ம்:

கல்வி உரிமைச்சட்ட‍ம்
தனியார் சுயநிதி பள்ளிக ளில் ஏழைகள் (குடும்ப ஆண் டு வரு மானம் ரூ.2 லட்சத்துக்குள்), நலிந்த பிரிவினர் (தாழ்த்தப் ட்டோர், பழங்குடியினர்), கைவி டப் பட்டோர் (அனா தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர், திருநங்கைகள், துப் புரவு தொழிலா ளர்களின் குழந்தைகள்) ஆகி யோருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும். அவர்களின் படி ப்பு செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.


கல்வி உரிமைச்சட்ட‍ம்படிப்பு செலவு என்பது அரசு பள்ளிகளில் ஒரு மாணவ ருக்கு செய் யப்படும் செலவு அல்லது தனியார் பள்ளிகளு க்கு நிர்ணயிக்கப் படும் கல் விக் கட்டணம். இதில் எது குறைவான நிதியோ அது நிர் ணயிக்கப்படும். இந்த நிதி யை பெறுவதற்காக தனியார் பள்ளி கள் தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும். உரியதொகை அந்த கணக்கில் ஆன்லைனில் (இ.சி.எஸ்.) செலுத்தப்படும். பெற் றோர் தங்கள் குழந்தை களைபள்ளியில் சேர்க்க வரும் போது வயது சான்றிதழ் இல்லை என்ற காரணத்தி னால் மாணவர் சேர்க்கை யை நிராகரிக்கக் கூடாது. பிறப்பு சான்றிதழ் கொண் டுவராத பட்சத்தில் குழந் தை பிறந்த மருத்துவம னையில் கொடுத்த ஆவ ணத்தையோ, அங்கன்வாடி ஆவணத்தையோ, அதுவும் இல்லா விட்டால் பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் பிறந்த தேதியை குறிப்பிட்டு அளி க்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


கல்வி உரிமைச்சட்ட‍ம்
பள்ளிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும்போது அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட் டணத்தை மட்டுமே வசூலி ப்போம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். அங்கீகார விதிமுறைகளை மீறினால் ஆய்வு செய்து அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். ஒவ்வொ ரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் 9 பேர் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட வேண்டும். அதில் 6 பேர் மாண வர்களின் பெற்றோராக இருக்க வேண்டும். எஞ்சிய இடங்களில் ஆசிரியர், உள்ளாட்சி நிர்வாகி, உள்ளூர் கல்வியாளர் ஆகியோருக்கு பிரதிநிதித் துவம் கொடுக்கப் பட வேண்டும். கல்வி சார்ந்த பணிகளைவிட ஆசிரியர் களுக்கு இதர பணிச்சுமைகளை கொடுக் கக் கூ டாது. உடல்ரீதியாகவோ, மன ரீதியா கவோ எந்த குழந்தையையும் துன் புறுத்த க்கூடாது. தனியார் பள்ளி களில், ஆசிரி யர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு இரு க்கும் கல்வித்தகுதி இல்லாமல் பணிபு ரிபவர் கள் இந்த சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண் டிற்குள் அந்த தகுதியை பெற்றால் தான் தொடர்ந்து பணிபுரிய முடியும். தனி யார் பள்ளி ஆசிரியர்களுக்காக அரசு நிர்ணயி த்துள்ள சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சட்டத்தின் முக்கியத்துவம் 


கல்வி உரிமைச்சட்ட‍ம்
குழந்தைகளின் இலவச மற் றும் கட்டாய ஆரம்பக் கல்வி க்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தரு ணமாகும். குடும்பங் கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறு தி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது. உலகி லுள்ள ஒருசில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகை யிலான இலவச கல்வி பெ ற, தேச அளவிலான ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ள ன.

இலவச கட்டாய ஆரம்பக் கல்வி

கல்வி உரிமைச்சட்ட‍ம்
6 முதல் 14 வயது வரை யிலான அனைத்து குழந்தை களும், தங்கள் வீட்டிற்கு அருகாமை யிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட் டாயக் கல்வி கற்க உரி மை பெறு கிறார்கள். ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல் லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்ட ணம்) மற்றும் மறை முகமான (சீருடைகள், பாடப் புத்தக ங்கள், மதிய உணவு, போக்கு வரத்து) எக்கட்டணமும் செலு த்தத் தேவையில்லை. குழந் தைகளின் ஆரம்பக் கல்வி பூர் த்தியாகும் வரை, கல்விக்கான அனை த்துச் செலவு களையும் அரசே ஏற்கும்.

சமுதாயத்தின் பங்கு 

கல்வி உரிமைச்சட்ட‍ம்
ஒவ்வொரு பள்ளியிலும் ஏற் படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழு வில் உள்ளூர் நிர்வாக அதி காரிகள், பெற்றோர், பாதுகாவல ர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுப் பினர்களாக இருப்பர். பள்ளி நிர் வாகக் குழு, பள்ளிக்கான மேம் பாட்டு திட்டங்களை வகுப்பது, அரசு நிதி யை முறையாகப் பயன் படுத்துவது மற்றும் ஒட்டு மொத் த பள்ளி யின் சூழலைக் கண் காணிப்பது ஆகிய பணி களை செய்யும். பள்ளி நிர்வா கக் குழுக் களில் 50 சத வீதம் பெண்கள் மற்றும் நலிவடை ந்த பிரிவைச் சேர்ந்த மாணவ ர்களின் பெற்றோர் உறுப்பின ராக இருக்க வேண் டும் என் பதை இச்சட்டம் கட் டாயமாக்கி உள்ளது. சிறுவர் மற்றும் சிறு மியருக்கான தனித்தனி கழிப்பறைகளை ஏற்படுத்து வது, உடல் நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து கல்வியை முழு மை பெற வைப்பது ஆகி யவற்றில் இவ்வாறான சமுதாய பங்கே ற்பு பெரிதும் உதவும்.

குழந்தைகள் விரும்பும் பள்ளி


கல்வி உரிமைச்சட்ட‍ம்

கல்வி உரிமைச்சட்ட‍ம்நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளி களும் கட்ட மைப்பு மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம்நிறைவேற்ற வேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில், ஒவ்வொரு 60 குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சிப் பெற்ற இரண்டு ஆசிரியர்கள் நியமி க்கப் படுவார்கள்.


கல்வி உரிமைச்சட்ட‍ம்
குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது, பாட த்திட்டத்தை முழுமை செய்வது, குழந்தை களின் கற்றுக் கொள்ளும் திறனை மதிப்பிடுவது, தவறாமல் பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்க ளை நடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டி ப்பாகக் கடை பிடிக்க வேண்டும். வகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல், மாணவ ர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர் களின் எண்ணிக்கை இருக்கும். குழந்தைகள் சிறப் பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரி யர்களுக்கு தேவையான உறுதுணையை அரசு நிறைவே ற்றும். பள்ளி நிர்வாகக் குழுவு டன் இணைந்து, பள்ளியின் தர த்தையும் சமத்து வத்தையும் உறுதி செய்வதில் சமுதாயமு ம், பெற்றோரும் முக்கிய பங் காற்ற வேண்டும். ஒவ்வொரு குழந் தையின் கல்வி உரிமைக் கனவை நனவாக்குவதற்கு தேவையான அனைத்து சட்ட வடிவ ங்களையும், ஏதுவான சூழ்நிலை களையும் அரசு உருவாக்கும்.

நடைமுறை மற்றும் நிதி


கல்வி உரிமைச்சட்ட‍ம்குடும்பங்கள் மற்றும் சமுதா யத்தின் உதவியுடன், ஒவ் வொரு குழ ந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம் பக் கல்வி பெறு வதை அரசு உறுதி செய்வதற்கு இச்சட் டம் ஒரு துவக்கத்தை அளித் துள்ளது.


கல்வி உரிமைச்சட்ட‍ம்
இதற்கு தேவைப்படும் நிதி யை, மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். மத்திய அரசு. தேவைப்படும் நிதியை கணக் கிடும். மாநில அரசுகளுக்கு, இதிலிருந்து குறிப்பிட்ட சத வீதம் நிதியாக வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தை நிறை வேற்றத் தேவையான கூடுதல் நிதியைமாநிலங்களுக்கு வழங்குவதை பரி சீலிலி க்கும்படி, மத்திய அரசு, மத்திய நிதிக் குழு வை (Finance Commission) கேட்டுக் கொள்ளும். சட்டத்தை நடை முறைபடுத்த தேவைப்படும் கூடுதல் நிதிக்கு மாநில அரசு கள் பொறுப்பேற்க வேண்டும். சமுதா ய அமைப்புகள், மேம்பாட்டு நிறுவனங் கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடி மக்களின் பங்களிப்புடன் நிதிப்பற்றாக் குறையை போக்க முடியும்.


கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால் . . .


கல்வி உரிமைச்சட்ட‍ம்
இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தே வைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பத ற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமி ஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதி மன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழ ங்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைக ளைப் பாதுகாப்பத ற்கான மாநி ல கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்க ளை (Right to Education Protection Authority – REPA) அமைந்து ள்ளது. குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக் கலாம். குழந்தை உரிமை களைப் பாதுகாப்பதற்கா ன மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆ ணையங்களால் மேல் முறை யீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும். அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.


பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள்


கல்வி உரிமைச்சட்ட‍ம்நாட்டிலுள்ள அனைத்து பள்ளி களிலும், குழந்தை களின் இல வச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி (RTE Act, 2009), பள்ளிச் சேர்க் கை நெறிமுறைகள் இருப்பதை உறுதி செய்ய, தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தொடர் நடவடிக்கைகளை மேற்கொண் டு வருகிறது. இலவசக் கட்டாய க் கல்விச் சட்டத்தின் விதிகளின்படி குழந்தைகளின் சேர் க்கை நடைபெற வேண்டும்.


கல்வி உரிமைச்சட்ட‍ம்
வகுத்துரைக்கப்பட்ட பிரிவு மற்றும் அரசு உதவி பெறாத தனியார்பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போன்றே, நலிவு ற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தை களுக்கு 25% இடஒதுக்கீட்டை உத் தரவாதப் படுத்த வேண்டும். மே லும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் குறித்த அட்ட வணை தயாரிக்கப்பட்டு, அருகா மைப் பகுதி குழந்தைகளை பள்ளி களில் சேர்த்துக் கொள்ள வேண் டும். நவோதயா பள்ளிகள் “வகுத் துரைக்கப் பட்ட பிரிவை’ சார்ந் ததாக இருப்பதால், இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுப்பப் பட்டது. ஆனால், இச் சட்டத்தின் பிரிவு 13 விதி விலக்குகள் இன்றிஅனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெ ளிவுபடுத்தியுள் ளது.

கல்வி உரிமைச்சட்ட‍ம்


இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 13

கல்வி உரிமைச்சட்ட‍ம்
எந்தப் பள்ளியோ அல்லது தனி நபரோ, குழந்தையின் பள்ளிச் சேர் க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகா ப்பாளரிட மிருந்து தலைக் கட்டணம்வசூலி ப்பதோ அல்லது முன் தேர்வு முறைக்குட்படுத்து தலோ கூடாது. உட்பிரிவு (1)க்கு புறம்பாக, தலைக் கட்டணம் வாங்கும் பள்ளி கள் மற்றும் தனி நபர்களு க்கு வசூலிலிக்கப்பட்ட கட் டணத்தைவிட பத்து மடங் கு வரை அபராதம் விதிக் கப்படும். குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற் கு முன் தேர்வு முறைக்கு உட்படுத்தி னால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலு ம், தொடர்ந்து மீறும் ஒவ் வொரு முறையும் ரூ.50,000/- வரையி லும் அபராதம் விதிக்கப் படும்.

குழந்தை உரிமைகள் ஆணையம்

கல்வி உரிமைச்சட்ட‍ம்கல்வி உரிமைச்சட்ட‍ம்சட்டப்பூர்வமான அமைப்பு தேசிய குழ ந்தை உரிமைகள் பாது காப்பு ஆணைய மாகும். இவ்வாணையம் புதுடெல்லி யைத் தலைநகரமாகக் கொண்டு செய ல்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கை கள் மற்றும் குழந்தைகள் உரிமை மீறல் களைக் கண்காணிக்கவும், தேவையா ன தலையீட்டை மேற்கொள்ள செய்யு ம் மேலும் இவ்வாணையத்தின் பணி களில் உதவிடும் வகையிலும் தமிழக த்தில் நியமிக்கப்பட்டுள்ள பிரதி நிதிக ளின் பணி அமையும். பள்ளிக ளில் நடைபெறும் வகுப்பறை வன்மு றைக ள் (குறிப்பாக, மாணவர்களுக்கு பல்வேறு வழி முறைகளில் தண் டனை வழங்குவது). மனரீதியான சித்திரவதை கள் செய்வது, பள் ளிக் குழந்தைகள் மீதான பாலிலியல் ரீதியான துன்புறுத்துதல் கள் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் போ து மாணவர்கள் அல்லது பெற்றோர் கள், சமூக ஆர்வலர்கள் இப்பிரதி நிதி களை நேரடியா கவோ அல்லது தொலைபேசி மூலமோ தொட ர்பு கொ ண்டு தங் களது புகார்களைத் தெரிவிக்கலாம்.


தமிழகப் பிரதிநிதிகள்:

வழக்கறிஞர் ஹென்றி திபேன்,
நிர்வாக இயக்குனர்,
மக்கள் கண்காணிப்பகம், மதுரை.


ஆசி பெர்னாண்டஸ்,
இயக்குநர், மனித உரிமைகள் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.

குழந்தைகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது புகார் களை தெரிவிக்க வேண்டிய

தொலைபேசி, அலைபேசி எண்கள்:

9994368500, 9994368501, 9994368523, 9994368526, 044-22355905, 044-22352503.


இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் அமலுக்கு வந்து விட் டது. மக்கள் கண்காணிப்பு இருந்தால் தான் மாற்றம் வரும். இல்லை என் றால் இதே நிலைதான் தொடரும். இ ந்தச் சட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25 சதவீம் ஏழைக் குழந்தைகளை இல வசமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, சென்னையிலுள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை அனுப் பியுள்ளன. அவற்றில், ஏழைக் குழந் தைகளுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கும். மோசமான பின்னணி யிலிலிருந்து வருகிறார்கள். கீழ்ப்படிதலும் ஒழுக்கமும் இருக்காது. இவர்களுடன் உங்கள் குழந்தைகள் படித்தால், அவர் களுக்கு பிரச்சினை ஏற்படும். இவை தவிர, இலவசமாக மாணவ ர்களைச் சேர்ப்பதால், உங்கள் குழந் தைகளுக்கான கட்டணம் மிக அதிகமாகி விடும் என்று சொல்லிலி, இதற்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தச் சொல்கிறார்கள். இந்தப் பள்ளிகள் கற்றுத் தரும் சமுதாய விழுமியங்கள் இவைதான். இவர் கள் எப்படி வளர்வார் கள் என்று யோசித்துப்பாருங்கள். சமுதாய த்தை மேம்படுத்தும் பொறுப்பு அரசுக்கு மட்டும் இல்லை. குடி மக்கள் அனைவருக்கும் உண்டு. குறிப்பாகக் கல்வி நிறுவனங் களுக்கு உண்டு. சீனா நம் மைவிட வேகமாக வளர்ச்சி பெற்று வருவதன் காரணமே அங்கு பின்பற்றப் பட்டுவரும் பொதுக் கல்வி முறைதான்.


இணையத்தில் இருந்ததை தகவளுடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எங்களுடன் பகிருங்கள்...

இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல குறைபாடுகள் உள் ளன.