A+ A-

இன்று:சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம்

அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

பெண்ணின் பெருமையை உணராத நாடு முழுமைபெறாது.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், ஆற்றலையும் மூடி மறைத்தால் அந்த நாடு எத்துறையிலும் வெறியடையாது ...

ஒவ்வொருவருடமும் பனிரண்டாம் வகுப்புத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெண்குழந்தகளே பெறுவதால்தான் அதற்கு மதிப் " பெண்கள் " என்று பெயர் வந்ததோ ?

ஆணுக்குப்பெண் என்றும் அடிமை இல்லை !!!!

அந்த ஆணையே பெற்றுத்தருவது பெண்கள்.

பெண்களிடம் மட்டுமே பொறுமை, நிதானம், அன்பு, அறிவு, ஆற்றல் அதிகம் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆணிண் வெற்றியிலும் ஒரு பெண் எந்த வகையிலாவது மறைந்திருப்பாள்.

சிவம் இல்லயேல் சக்தி இல்லை !!!! என்றாலும்கூட .....

சக்தி இல்லையேல் சிவம் இல்லை .... என்று சொன்னபிறகே இந்த வாக்கியமும் முழுமை பெறுகின்றது.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் .....

பெண்ணுக்கு தன் உடலில் சரிபாதியை விட்டுக்கொடுத்தவன் ஈசன் என்றாலும்கூட .....

அனைத்து ஆண்களும் பெண்ணுக்கு கட்டுப்பட்டவனென்று சுட்டிக்காட்டியது இந்து மதம் மட்டுமே !!!

மகளிர் தினத்தை போற்றுவோம் .... பெண் கல்வியை சட்டமாக்குவோம் ... அதுமட்டுமல்ல கட்டாயமாக்குவோம் ....

நிகழ்வுகள் இந்நாளில் 


அல்பானியா, ரோமானியா - அன்னையர் நாள்
ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 


1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.

1761 - வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1782 - ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். 
கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.


1817 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.

1906 - பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1911 - அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

1917 - ரஷ்யாவில் பெப்ரவரிப் புரட்சி (பெப்ரவரி 13 - பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.

1921 - ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1924 - யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் கொல்லப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் ஜப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.

1950 - சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.

1957 - எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.

1965 - வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.

இந்நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1879 - ஓஒட்டோ ஹான், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)
1886 - எட்வர்ட் கெண்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)
1908 - பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

இந்நாளில் மறைந்த பிரபலங்கள் 


1922 - சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1854
1923 - ஜொஹானஸ் வான் டர் வால்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1837)
1974 - ஜே. பி. சந்திரபாபு, பாடகர், நடிகர் (பி. 1924)
2004 - அபூ அப்பாஸ், பாலஸ்தீன விடுதலை முன்னணி தாபகர் (பி. 1948)

பெண்ணின் பெருமையை உணராத நாடு முழுமைபெறாது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், ஆற்றலையும் மூடி மறைத்தால் அந்த நாடு எத்துறையிலும் வெறியடையாது ... ஒவ்வொருவருடமும் பனிரண்டாம் வகுப்புத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெண்குழந்தகளே பெறுவதால்தான் அதற்கு மதிப் " பெண்கள் " என்று பெயர் வந்ததோ ?