A+ A-

அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் மற்றும் சில பொதுநல அமைப்புகள் போராட முடிவு.....

கடந்த 60 ஆண்டு காலமாக அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் பல போரட்டங்களில் ஈடுபட்டனர் .அதில் சில

அவினாசி அத்திக்கடவு

1. 1993-ம் வருடம் மக்கள் சக்தி இயக்க நிறுவனர், காலஞ்சென்ற முனவைர் எம். எஸ். உதயமூர்த்தி ஐயா அவர்கள் தலைமையில் 9 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ளபட்டது.

2. 1996-ல் ஈரோடு மாவட்டம் (தற்போது திருப்பூர் மாவட்டம்) குன்னதூரில் திட்டத்தை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்.

3. ஈரோடு மாவட்ட பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் அனைவரும் இணைந்து அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களிடம் மனு கொடுத்தனர்.

4. அவினாசி தொகுதியில் அவினாசி அத்திக்கடவு வேட்பாளராக திரு. மோகன்குமரை அவர்களை நிறுத்தி திட்டதிருக்கு அதரவாக 38,000 வாக்குகளை பெற்று அரசின் கவனத்தை திருப்பினர்.

5. 2003 - யில் கொங்கு பேரவை சார்வாக குமார. இரவிக்குமார் தலைமையில் உண்ணாவிரதம்.
....
....
என பல போராட்டங்களை நடத்தினர்  இதன் தொடர்ச்சியாக 27.02.2014 அன்று மக்கள் அமைதி ஊர்வலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அவினாசி அத்திக்கடவு


இத்திட்டம் என்று நிறைவேறும் என்பதே காரமடை, மேட்டுபாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துகுளி, நம்பியூர், புளியம்பட்டி உள்ளிட்ட  7 சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த  மக்களின் கவலையாக உள்ளது ...

அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 27.02.02014 அன்று மக்கள் அமைதி ஊர்வலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.