A+ A-

அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த அமைதி ஊர்வலம்


அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி, பொதுமக்கள் பங்கேற்கும் அமைதி ஊர்வலம், அவிநாசியில் (27-2-2014) நடந்தது .

இந்த அமைதி ஊர்வலத்தை முன்று மதத்தை சேர்ந்த பெரியவர்கள் தொடங்கி வைத்தனர் ..

அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் மூலம், மழைக்காலங்களில், பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, வாய்க்கால் மூலம் கொண்டு செல்லப்படும்; கோவை, காரமடையில் துவங்கி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 33 குளங்கள், 300 குட்டைகளில், நீர் நிரம்பும்.

முன்னாள் முதல்வர், காமராஜர் காலத்தில், அப்போதைய, எம்.எல்.ஏ., மாரப்பனால் வலியுறுத்தப்பட்ட இத்திட்டம், 50 ஆண்டுகளாக, கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

திட்டத்தை நிறைவேற்றக்கோரி, பல போராட்டங்கள் நடந்துள்ளன. 

இந்நிலையில், அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் மேம்பாட்டு போராட்டக்குழு, அவிநாசியில்  (27-2-2014) அமைதி ஊர்வலம் நடந்தது .

தண்ணீர் அவசியம் குறித்து வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள்,வாசகங்கள் அடங்கிய பலாகைகளை ஏந்தியபடி மக்கள் பங்கற்றனர் .

அமைதி ஊர்வலம் பங்கேற்ற கூட்டத்தில் ஒரு பகுதியுனர் ..










அவினாசி வ.வு.சி திடலில் அத்திகடாவில் இருந்து கொண்டுவந்த நீரில் மரக்கன்று நடப்பட்டது .


இருதியுள் அவினாசி  தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது 

இந்த அமைதி ஊர்வலத்தில் அவிநாசி வட்டாரத்தில் உள்ள கட்சிகள், தனியார், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட, 80க்கும் மேற்பட்ட அமைப்புகளிலும் பங்கேற்றனர் .


அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி, பொதுமக்கள் பங்கேற்கும் அமைதி ஊர்வலம், அவிநாசியில் (27-2-2014) நடந்தது .