A+ A-

இந்தியாவில் தனது புதிய சாதனங்களைக் களமிறக்கும் ஆப்பிள் தனது வருமானத்தையும் சீராக வளர்த்து வருகிறது.......


ஆப்பிள் தனது கவனத்தை தற்போது இந்தியாவின் பக்கம் திருப்பி இருக்கிறது. அதன் விளைவாக தற்போது தனது ஐமேக் மற்றும் மேக் மினி டெஸ்க்டாப்புகள் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்புகளை இந்திய கணினிச் சந்தையில் களமிறக்கி இருக்கிறது. இந்த 3 சாதனங்களும் மேக் ஒஎஸ் எக்ஸ் மவுண்டைன் லயன் சிப்புடன் வருகின்றன.
Apple Macbook Pro

13 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்பை எடுத்துக் கொண்டால் இந்த லேப்டாப் 13.3 இன்ச் ரெட்டின் டிஸ்ப்ளே மற்றும் ஐபிஎஸ் பேனலுடன் வருகிறது. அதோடு 8ஜிபி ரேம் மற்றும் இன்டல் கோர் ஐ7 ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வருவதால் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்பதில் ஐயமில்லை.
வாட் வரியோடு சேர்த்து இந்த மேக்புக் ப்ரோ 128ஜிபி ப்ளாஷ் சேமிப்புடன் ரூ.1,14,900க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் 256ஜிபி ப்ளாஷ் சேமிப்புடன் வரும் மேக்புக் ப்ரோ வாட் வரியோடு சேர்த்து ரூ.1,34,900க்கு விற்கப்படுகிறது.
அடுத்ததாக புதிய ஐமேக் லேப்டாப் க்வாட்ர் கோர் இன்டல் கோர் ஐ5 ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்கள், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிபியு, 8ஜிபி 1600 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேம் மற்றும் 1டிபி ஹார்ட் ட்ரைவ் ஆகியவற்றுடன் வருகின்றது. மேலும் இந்த லேப்டாப்பை அப்க்ரேட் செய்யவும் முடியும். மேலும் இந்த ஐமேக் 21.5 இன்ச் மற்றும் 27 இன்ச் ஆகிய 2 அளவுகளில் வருகின்றன. அதோடு 4 யுஎஸ்பி போர்ட்டுகளுடன் இந்த லேப்டாப் வருகிறது.
21.5 இன்ச் ஐமேக் லேப்டாப் ரூ.85,900க்கும், 27 இன்ச் ஐமேக் ரூ.1,22,900க்கும் விற்கப்படுகின்றன.
அடுத்ததாக புதிய மேக் மினி லேப்டாப் ஐவி பிரிடட்ஜ் டூவல் கோர் இன்டல் கோர் ஐ5 மற்றும் க்வாட் கோர் இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர்களுடன் வருகிறது. மேலும் இதில் 4ஜிபி 1600 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு போன்றவற்றைப் பார்க்கலாம். இந்த ஐ5 மேக் மினி வாட் வரியோடு சேர்த்து ரூ.39,900க்கும், இன்டல் கோர் ஐ7 டர்போ பூஸ்ட் ஆகியவற்றுடன் வரும் மேக் மினி ரூ.52,900க்கும் விற்கப்படுகின்றன.
இன்டல் கோர் ஐ7 மற்றும் ஒஎஸ் எக்ஸ் செர்வருடன் வரும் மேக் மினி லேப்டாப் வாட் வரியுடன் சேர்த்து ரூ.65,900க்கு விற்கப்படுகிறது.மேலும் 

சீராக வளர்ந்து வரும் ஆப்பிளின் வருமானம் பற்றி பார்ப்போம்....

Tim Cook Apple Quarterly Eearnings
ஆப்பிள் நிறுவனம் தனது இந்த ஆண்டின் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரைக்குமான அதாவது நான்காவது காலாண்டின் வருமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி இந்த காலாண்டில் ஆப்பிள் 36 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் மற்றும் தனது நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 8.67 டாலர்களையும் பெற்றிருப்பதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது. ஆனாலும் இந்த வருமானம் எதிர்பார்த்ததைவிட குறைவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த காலாண்டில் மட்டும் 26.9 மில்லியன் ஐபோன்கள் விற்றிருக்கின்றன. இது 58 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த காலாண்டில் 14 மில்லியன் ஐபேடுகளை ஆப்பிள் விற்றிருக்கிறது. இது 26 சதவீதம் அதிகமாகும். அதோடு ஆப்பிள் 4.9 மில்லியன் மேக்குகளை விற்றிருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் ஆகும். ஆனால் இந்த காலாண்டில் 5.3 மில்லியன் ஐபோடுகளை மட்டுமே ஆப்பிள் விற்றிருக்கிறது. இது 19 சதவீதம் குறைவாகும்.
மேலும் தாங்கள் இந்த விடுமுறை காலத்திற்காக சிறந்த ஐபோன், ஐபேட், மேக், மற்றும் ஐபோடுகளைத் தயாராக வைத்திருப்பதாக ஆப்பிளின் தலைவர் டிம் குக் கூறியிருக்கிறார்.
வரும் காலாண்டில் 51 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை வரும் காலாண்டில் இலக்காக வைத்திருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. இந்த இலக்கை ஆப்பிள் அடைந்தால் அது ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக இருக்கும் என்று தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது இந்த ஆண்டின் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரைக்குமான அதாவது நான்காவது காலாண்டின் வருமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்த காலாண்டில் ஆப்பிள் 36 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் மற்றும் தனது நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 8.67 டாலர்களையும் பெற்றிருப்பதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது. ஆனாலும் இந்த வருமானம் எதிர்பார்த்ததைவிட குறைவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.