நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் இருப்பதற்கான சான்றுகளை நாசா அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் நாசா அறிவியலாளர்கள் தகவல் !!!

பூமிக்கு வெளியே இருக்கும் கோள்களில் மனிதன் வசிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பதை அறியும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள வானியல் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே சந்திரனுக்கு சந்திராயன் என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ அனுப்பியிருந்தது, அதனுடன் நாசாவின் கனிமவியல் வரைவுக் கருவியையும் கொண்டு சென்றிருந்தது.
அந்த கருவி எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து வரும் நாசா விஞ்ஞானிகள், நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் இருப்பதற்கான சான்றுகளை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
அங்குள்ள பாறைகளில் படிந்துள்ள ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை அடங்கிய ஹைட்ராக்சில் இருப்பதைக் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ள விஞ்ஞானிகள், அந்த பாறைகளின் தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும், பாறைக் குழம்புகளைக் கொண்டு நிலவின் தோற்றம் அங்குள்ள கனிம வளங்கள் என்ன என்பதை அறியும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.

பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாக செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் தோன்றியிருக்கலாம் என விஞ்ஞானிகள்  தகவல் ...

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே உயிர்கள் வாழ ஏற்ற சூழல் செவ்வாயில் நிலவியதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உயிர் வாழ தேவையான மூலக்கூறு ஒன்று சேர செவ்வாயில் வாய்ப்புகள் சிறப்பாக இருந்தன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்தலியின் ஃப்லோரன்ஸ் (Florence) பகுதியை சேர்ந்த ஆய்வு பேராசிரியர் பென்னர் (Benner), இந்த தகவலை அறிவியல் கருத்தரங்கில் முன்வைத்தார்.
ஆர்.என்.ஏ (RNA), டி.என்.ஏ (DNA) மற்றும் ப்ரோட்டின் (Protein)-கள் அடங்கிய மூலக்கூறு எவ்வாறு ஒன்றிணைந்தது என்பது நீண்ட நாள்களாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துவந்த ஒன்று. 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான ஆதிகால மரபணு பொருட்களை காட்டிலும், செவ்வாயில் உருவானது கடினமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆர்.என்.ஏ (RNA) அமைப்பிற்கான கனிமங்கள் ஆரம்பகால பூமியின் பெருங்கடல்களில் கலந்திருக்கலாம் என்றும், இது பூமியை காட்டிலும், செவ்வாயில் அதிகம் இருக்க வாய்ப்புகள் உள்ளதென்றும் பேராசிரியர் பென்னர் (Benner)-ன் ஆய்வில் அவர் தெரிவிக்கிறார். இதனால் உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கூறுகள் எரிகற்கள் மூலமாக பூமிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


செல்ஃபோனில் ஆண்டிராய்டு என்ற இயங்கு தள வசதியை அளிக்கும் கூகுள் நிறுவனம், தனது அடுத்த மென்பொருள் கண்டுபிடிப்புக்கு கிட்கேட் என்று பெயரிட்டுள்ளது.
ஏற்கனவே, ஆண்டிராய்டு ஜிஞ்சர்ப்ரெட், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லிபீன் எனப் பெயரிட்ட நிலையில், அதிவேகம் கொண்ட அடுத்த கட்ட ஆண்டிராய்டு 4.4 மென்பொருளை இப்போது தயாரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பெயர்களை தனது ஆண்டிராய்டு மென்பொருட்களுக்கு கூகுள்  வைத்து வருகிறது.
சாக்லெட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் இந்தப் பெயரைத் தேர்வு செய்துள்ளதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



பின்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா தனது செல்போன் தயாரிப்பு யூனிட்டை 7.17 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

நெட்வொர்க் உள்கட்டமைப்பு, மற்றும் சேவைத் துறைகளை தன் வசம் வைத்துள்ள நோக்கியா தனது செல்போன் தயாரிப்புகளுக்கான அனைத்துக் காப்புரிமைகளையும் 10 ஆண்டுகளுக்கு மைக்ரோசாப்டி நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

செல்போன் தயாரிப்பில் பல மைல்கல்களை எட்டியுள்ள நோக்கியா சமீபமாக சாம்சங், மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் சந்தையில் போட்டியை சந்திக்க முடியவில்லை.

இதனால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்திடம் விற்பதே சிறந்த வணிக மாதிரி என்று அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

நோக்கியாவில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 32,000 ஊழியர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please share to your friends.....

மேலும் இது போன்ற கம்ப்யூட்டர் தகவல்களுக்கு....

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.