A+ A-

நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் நாசா அறிவியலாளர்கள் தகவல் !!!

நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் இருப்பதற்கான சான்றுகளை நாசா அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் நாசா அறிவியலாளர்கள் தகவல் !!!

பூமிக்கு வெளியே இருக்கும் கோள்களில் மனிதன் வசிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பதை அறியும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள வானியல் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே சந்திரனுக்கு சந்திராயன் என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ அனுப்பியிருந்தது, அதனுடன் நாசாவின் கனிமவியல் வரைவுக் கருவியையும் கொண்டு சென்றிருந்தது.
அந்த கருவி எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து வரும் நாசா விஞ்ஞானிகள், நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் இருப்பதற்கான சான்றுகளை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
அங்குள்ள பாறைகளில் படிந்துள்ள ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை அடங்கிய ஹைட்ராக்சில் இருப்பதைக் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ள விஞ்ஞானிகள், அந்த பாறைகளின் தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும், பாறைக் குழம்புகளைக் கொண்டு நிலவின் தோற்றம் அங்குள்ள கனிம வளங்கள் என்ன என்பதை அறியும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.

நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் இருப்பதற்கான சான்றுகளை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அங்குள்ள பாறைகளில் படிந்துள்ள ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை அடங்கிய ஹைட்ராக்சில் இருப்பதைக் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ள விஞ்ஞானிகள்