ஃபேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் “ஹேக்கர்ஸ் கப்” என்றவொரு மிகப்பெரிய போட்டியை 2011 முதல் நடத்திவருகிறது. இதில் உலகின் எந்தப்பகுதியில் இருந்தும் யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம். வெற்றி பெறுபவர்களுக்கு மிகப்பெரிய பரிசும் ஃபேஸ்புக் நிறுவனத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
ஃபேஸ்புக் அலுவலகங்கள்
இந்த ஹேக்கர்ஸ் கோப்பையை வெல்வதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது ஃபேஸ்புக் இணையதளத்தின் ஏதாவது ஒரு பகுதியை ஹேக் செய்யவேண்டும். அல்லது குறிப்பிட்ட தகவலை திருடவேண்டும்.

ஃபேஸ்புக்கின் தகவலை திருடினால் உடனே வேலை என்பது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் வெற்றிபெறுவதில் தானிருக்கிறது உங்களின் சாமர்த்தியம்.

இந்த போட்டிக்கான விவரங்கள் மற்றும் அட்டவணை கீழே:

அட்டவணை :
  • முன்பதிவு தொடங்கும் நாள்: ஜனவரி 7 முதல் 27 வரை,
  • ஆன்லைன் தகுதிச்சுற்று: ஜனவரி 25 முதல் 27 வரை,
  • ஆன்லைன் நீக்குதல் சுற்று 1 : பிப்ரவரி 2
  • ஆன்லைன் நீக்குதல் சுற்று 2 : பிப்ரவரி 9
  • ஆன்லைன் நீக்குதல் சுற்று 3 : பிப்ரவரி 16
  • கடைசி சுற்று: மார்ச் 22 – 23.

போட்டிக்கான பதிவுகள் அடுத்தவாரம் முதல் தொடங்கும்.
source:tamil.gizbot.com

1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்.

இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.

கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.

கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.

போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?


ஃபேஸ்புக்கில் “இன்ஸ்டகிராம்” என்ற ஒரு புகைப்பட அப்ளிகேசன் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த இன்ஸ்டகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு பெரிய தொகைக்கு வாங்கியது நினைவிருக்கலாம்.

இந்த அப்ளிகேசன் இப்பொழுது சரிவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் 16.4 மில்லியன் பயனாளர்களில் இருந்து 12.4 மில்லியன் பயனாளர்களாக குறைந்துள்ளது. இந்த பிரபலமான அப்ளிகேசனின் பயனாளர்கள் வீழ்ச்சிக்கு முக்கியகாரணமாக சொல்லப்படுவது கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறை தினங்களே!

ஆனால் ஃபேஸ்புக் பயனாளர்கள் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்திய அரசு வெளியிட்ட குறைந்த விலை டேப்லெட்டான “ஆகாஷ்”-ன் அடுத்த பதிப்பான 3 வெளிவரும் நிலையில் உள்ளது. இந்த ஆகாஷ் 3 டேப்லெட்டில் சிம் போடும் வசதியும் மேலும் பல அப்ளிகேசன்களை பயன்படுத்தும் வகையில் வெளியாக உள்ளது.

இந்த குறைந்த விலை டேப்லெட் கணினியில் பேசும் வசதியும் கிடைக்கப்பெறும் என்பது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இதன் விலையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருக்குமாம்.

இந்த அடுத்த பதிப்பில் 50 லட்சங்களுக்கும் மேலான டேப்லெட்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது 2013னின் பிப்ரவரி மாதம் முதல் சந்தைப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

எல்லாம் சரிதான் ஆனால் முந்தைய “ஆகாஷ்” டேப்லெட்டுக்கான பதிப்பு பலரை சென்றடையவில்லை என்பது வருத்தமே!

மின்சக்தி தேவைப்படும் சாதனங்களல் ஒட்டிக்கொள்வதன்மூலம் அவற்றிற்கு அவசியமான மின்னை உற்பத்திசெய்து வழங்கக்கூடிய சூரியக் கலங்களை ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன் தேவை ஏற்படாதவிடத்து இவற்றினை அகற்றிவிட முடியும். அதாவது Sticker போன்று தொழிற்படும் ஆற்றல் பொருந்தியதாகக் காணப்படுகின்றது.
மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இவை வளையும் தன்மையைக் கொண்டுள்ளதுடன் உடைவை தவிர்ப்பதற்காக கடினத்தன்மை வாய்ந்த கண்ணாடிப் பதார்த்தம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏப்ரலில் “S Pen” அமைப்புடன் வரப்போகும் சாம்சங் கேலக்ஸி S4
மொபைல் போன்கள் வரிசையில் “S Pen” என்ற அமைப்புடன் வரப்போகும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி S4 தான். முன்னர் சாம்சங் நிறுவனம் இந்த அமைப்பினை தனது “நோட்” சைகளிவரில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே போன்களில் முதல்முறையாக பயன்படுத்துகிறது.

இந்த செய்தியை சாம்சங் நிறுவனமும் உறுதிசெய்திருப்பதாக தெரிகிறது. மேலும் கொரியா வட்டாரத்தகவல்கள் இந்த சாம்சங் கேலக்ஸி S4ஆனது வரும் புதுவருடத்தின் ஏப்ரல் முதல் விற்பனைக்குவரும் எனத்தெரிகிறது.

இந்த அதிநவீன ஸ்மார்ட்போனின் நுட்பக்கூறுகள் சில,
  • 5 அங்குல AMOLED திரை,
  • 1080பி HD தரம்,
  • ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன்,
  • குவாட்-கோர் A7ப்ராசெசர்,
  • 28nm K மெட்டல் என்ற தொழில்நுட்பம்,
  • 13 எம்பி கேமரா,
  • 9.2 மிமீ அளவுகொண்ட வடிவமைப்பு,
  • S-Pen,


சம்சங்கிடம் தோற்றுப்போன ஆப்பிள்!
சாம்சங் நிறுவனம் தங்களது ஐபோன் மொபைல் வடிவமைப்பு மற்றும் சில நுட்பக்கூறுகளை திருடியே கேலக்ஸி எஸ் 3 மினி மற்றும் வேறு சில போன்களை வடிவமைத்திருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தது அனைவருக்கும் தெரிந்ததே!

இவ்வழக்கில் திருப்பம் ஏற்ப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்க சந்தைகளில் தனது தயாரிப்புகளை விற்காமல் இருந்தது சாம்சங்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது வழக்கினை திரும்பப்பெற்றுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பு வருவதற்கு முன்பே வழக்கை திரும்பப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்சங்கிடம் தோற்றுவிடுவோம் என்ற பயம்கூட ஆப்பிள் நிறுவனத்திற்கு இருந்திருக்கலாம். இப்பொழுதும் தோற்றுவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.