comedy
சிரிக்கலாம்
அவள்: ஏரோப்ளேன்ல 50 செங்கல் இருக்கு; ஒண்ணு கீழே விழுந்தா மிச்சம்?

இவன்: 49

அவள்: ஓகே. யானைய ஃப்ரிட்ஜ் உள்ள எப்டி வெப்பே?

இவன்: பழைய ஜோக்; கதவ திறந்து.

அவள்: அப்ப மானை?

இவன்: யானைய எடுத்துட்டுதான்.

அவள்: காட்டுல சிங்க ராஜா விருந்து வெச்சார். ஒரு மிருகம் மட்டும் போகல, எது?

இவன்: மான். அது ஃப்ரிட்ஜுக்குள்ளதான் இருக்கு.

அவள்: பாட்டி முதலைகள் இருக்கற ஆற்றை எப்டி ஈஸியா கடந்தாள்?

இவன்: முதலைகள்தான் சிங்க ராஜா விருந்துக்கு போய்டுச்சே.

அவள்: ஆனாலும் அவள் ஆற்றை கடக்கைய்ல செத்துப்போனாள். ஏன்?

இவன்: ஏன், தெரியலையே…

அவள்: அந்த செங்கல் அவ தலையில விழுந்துடுத்து.

நீங்க முடியல்லன்னு சொல்றது காதுல விழுது





37 ஆயிரம் ரூபாய் விலையை கேட்டு,ஆச்சரியமடைய வேண்டாம்,இது உண்மை ஆனால் இது சிறுவர்களுக்கான கார்......




ஆமாங்க உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில், 12வது, "ஆட்டோ எக்ஸ்போ' நடைபெற்று வருகிறது.அங்கு உலகின் முன்னணி கார் நிறுவனங்கள், தங்கள் கார்களை விற்பனை மற்றும் கண்காட்சிக்கு வைத்துள்ளது. இதில், ஆடி நிறுவனத்தின், சிறுவர்களுக்கான ஸ்போர்ட்ஸ் கார் 37 ஆயிரம் ரூபாய்...

                                
இதுகுறித்து, ஆடி நிர்வாகி ஒருவர் கூறுகையுள் பேட்டரியில் இயங்கக் கூடிய இந்த காரை, ஒரு முறை, "சார்ஜ்' செய்தால், இரண்டு மணி நேரம் ஓட்டலாம்; 2 3 யூனிட் மின்சாரம் செலவாகும். மணிக்கு, 8 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியது; "ஸ்டியரிங்' மற்றும், "ரிமோட்' மூலம், காரை இயக்க முடியும்; இரண்டு இருக்கைகளைக் கொண்டு, இந்த காரில், சீட் பெல்ட் உள்ளிட்ட, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. காரின் வெளிப்பகுதி, ஸ்பிரிங் போல் இயங்குவதால், வேகமாக செல்லும் போது, விபத்து ஏற்பட்டாலும், அதை ஓட்டும் சிறுவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. இவ்வாறு, அந்த நிர்வாகி கூறினார்.

உங்கள் கருத்து...!!
உங்கள் கருத்து...!!

செய்தி:

இந்தியாவில் சூரிய மின்சார தயாரிப்பில் உள்நாட்டு உபகரணங்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா உலக வர்த்தக நிறுவனத்தில் புகார்..

செய்தி ஆதாரம்:Dinakaran.com

  1. இந்த புகார் நியாயமானத  QUESTION
இதற்க்கு உங்கள் கருத்து QUESTION




1
gas pipeline

"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"
இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்தி… படித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்… நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்…

புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.
கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை “திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!”. கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

Memorycard

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . 
சரிதானே ?
sony Memory Card class10

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது

நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்!!



twitter

அமெரிக்காவை சேர்ந்த இந்த டுவிட்டருக்கு மக்கள் செல்வாக்கு பெருமளவு குறைந்து வருகிறதாம். இது குறித்து அந்நிறுவனத்தின் 2013ம் ஆண்டுக்கான கடைசி காலாண்டு நிதி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்தை போல, டுவிட்டரின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன. எனவே, டுவிட்டர் வலைதளத்தை தற்போதைய நிலையை விட இன்னும் மேம்படுத்தினால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து மீள முடியும் என வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஆதரவு குறைவதால், டுவிட்டர் வலைதளத்துக்கு சுமார் ரூ.3,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் ரூ.500 கோடியாக இருந்த நஷ்டம், ஓராண்டு காலத்துக்கு ரூ.4100 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாட்டை ஆராயும் போரஸ்டர் நிறுவனத்தின் வல்லுநர் எலியாட் கூறுகையில், ‘டுவிட்டரில் அதிகநேரம் நீடிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், டுவிட்டரின் வர்த்தகம் நஷ்டத்தில் போகிறது. மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை டுவிட் செய்வதன் மூலம்தான் அந்நிறுவனத்துக்கு வருமானமே கிடைக்கிறது. ஆனால், டுவிட்டரை பார்வையிடுபவர்கள் ஒரு சில நிமிடங்களில் வெளியேறுவதால், விளம்பர நிறுவனங்கள் டுவிட்டரை ஒதுக்குகின்றன. 

மேலும், டுவிட்டர் பதிவுகளால் பல விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுகிறது. ஒருவர் தனது சர்ச்சையான பதிவு காரணமாக சமூகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். இதனால் மற்றவர்கள் டுவிட்டரில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கிறார்கள். இதுவும் டுவிட்டரின் நஷ்டத்துக்கு ஒரு காரணம்’ என கூறியுள்ளார்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.