A+ A-

புதிய ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!




37 ஆயிரம் ரூபாய் விலையை கேட்டு,ஆச்சரியமடைய வேண்டாம்,இது உண்மை ஆனால் இது சிறுவர்களுக்கான கார்......




ஆமாங்க உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில், 12வது, "ஆட்டோ எக்ஸ்போ' நடைபெற்று வருகிறது.அங்கு உலகின் முன்னணி கார் நிறுவனங்கள், தங்கள் கார்களை விற்பனை மற்றும் கண்காட்சிக்கு வைத்துள்ளது. இதில், ஆடி நிறுவனத்தின், சிறுவர்களுக்கான ஸ்போர்ட்ஸ் கார் 37 ஆயிரம் ரூபாய்...

                                
இதுகுறித்து, ஆடி நிர்வாகி ஒருவர் கூறுகையுள் பேட்டரியில் இயங்கக் கூடிய இந்த காரை, ஒரு முறை, "சார்ஜ்' செய்தால், இரண்டு மணி நேரம் ஓட்டலாம்; 2 3 யூனிட் மின்சாரம் செலவாகும். மணிக்கு, 8 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியது; "ஸ்டியரிங்' மற்றும், "ரிமோட்' மூலம், காரை இயக்க முடியும்; இரண்டு இருக்கைகளைக் கொண்டு, இந்த காரில், சீட் பெல்ட் உள்ளிட்ட, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. காரின் வெளிப்பகுதி, ஸ்பிரிங் போல் இயங்குவதால், வேகமாக செல்லும் போது, விபத்து ஏற்பட்டாலும், அதை ஓட்டும் சிறுவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. இவ்வாறு, அந்த நிர்வாகி கூறினார்.

ஆடி நிறுவனத்தின், சிறுவர்களுக்கான ஸ்போர்ட்ஸ் கார், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இதன், 37 ஆயிரம் ரூபாய் விலையை கேட்டு, ஆச்சரியமடைந்த வாடிக்கையாளர்கள், அதிகளவில் வாங்கிச் சென்றனர்.