பேராசை இல்லாது இருந்தால்,  வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக  இருக்கலாம் சிறுகதை..

பாண்டிய நாட்டு அரண்மனையில் அரசரின் பிறந்த நாள் விழாவை கோலாகலாமாகக் கொண்டாடினர். வந்தவர்களுக்கெல்லாம் இல்லை என்னாது வாரி வழங்கினார் அரசர். அங்கே வந்த மலையன் என்பவன் அரசரை பணிவாக வணங்கினான்.

"அரசர் பெருமானே! நான் வறுமையில் வாடுகிறேன். வளமாக வாழ நீங்கள் அருள் புரிய வேண்டும்,'' என்று பணிவாக வேண்டினான்.

"உனக்கு என்ன வேண்டும்? தயங் காமல் கேள்,'' என்றார் அவர்.
பேராசை கொண்ட அவனுக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை.

"அரசர் பெருமானே! என் உள்ளம் மகிழு மாறு நீங்கள் பொற்காசுகளைத் தாருங்கள்,'' என்றான் அவன்.

இவன் பேராசை கொண்டவனாக இருக் கிறான். அதனால்தான் இப்படிக் கேட்கிறான் என்று நினைத்த அரசர், அவனைக் கருவூலத் திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே குவியல் குவியலாகப் பொற்காசு கள் கொட்டிக் கிடந்தன. அவற்றை வியப் புடன் பார்த்தான் அவன்.

"உனக்கு எவ்வளவு பொற்காசுகள் விருப்பமோ அவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லலாம்,'' என்றார் அவர்.

"நீ இங்கிருந்து ஒரே ஒருமுறை எவ்வளவு பொற்காசுகளை வேண்டு மானாலும் எடுத்துச் செல்லலாம். வெளியே செல்லும் வரை அவற் றைக் கீழே வைக்கக் கூடாது. கீழே வைத்தால் பொற்காசுகள் மீண்டும் கருவூலத்தில் சேர்ந்து விடும்,'' என்றார்.

அவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.

"நான் வலிமையாக இருக்கிறேன். இங்கிருந்து ஏராளமான பொற்காசுகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வந்தன் நான்தான்' என்று மகிழ்ச்சி அடைந்தான் அவன்.

அங்கிருந்த சாக்குப் பை ஒன்றை எடுத்தான். அதற்குள் பொற்காசுகளை அள்ளி அள்ளிக் கொட்டினான்.பையில் பாதி நிரம்பியது. அதைத் தூக்கிப் பார்த்தான். அவனால் தூக்க முடிந்தது. பேராசை கொண்ட அவன், இன்னும் தன்னால் தூக்க முடியும் என்று நினைத்தான்.

மேலும், பொற்காசுகளைப் பைக்குள் போட்டான்.

அப்போதும் அவனுக்கு நிறைவு ஏற்படவில்லை.

கருவூல வாயில் வரை தூக்கிச் செல்ல வேண்டும். சிறிது தொலைவுதானே. எப்படியும் தூக்கிச் செல்லலாம் என்று நினைத்தான்.

பை நிரம்ப பொற்காசுகளைப் போட்டான்.



அந்தப் பையை அசைத்துப் பார்த்தான். மிகவும் கனமாக இருந்தது.

முயற்சி செய்து அந்தப் பையைத் தூக்கி முதுகில் வைத்து அதைச் சுமந்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.


பத்தடி எடுத்து வைத்திருப்பான். அதற்கு மேல் அவனால் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியவில்லை; பையைக் கீழே போடவும் விரும்பவில்லை.

முதுகெலும்பு முறிந்து அங்கேயே விழுந் தான் அவன். பொற்காசுப் பை அவன் மேல் கிடந்தது. அப்படியே இறந்து போனான்.


அங்கே வந்த அரசர் அவன் கீழே விழுந்து இறந்து கிடப்பதைப் பார்த்தார்.

பேராசை இல்லாது இருந்திருந்தால், இவன் வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக இருந்து இருக்கலாம். பேராசையால், அவனுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினர் அரசர்.
'பேராசை பெருநஷ்டம்' என்று சும்மாவா சொன்னார்கள்!

முருங்கையின் மருத்துவ மகிமை...

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.

தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கையின் மருத்துவ மகிமை...


முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்,
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது,
புரதம் – 6.7%,
கொழுப்பு – 1.7%,
தாதுக்கள் – 2.3% மற்றும்
கார்போஹைட்ரேட்கள் – 12.5%.

இது கதையல்ல நிஜம இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் ...

ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார்.
அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம் குறைவாக உள்ளது என்றார்.

அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான். நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான். மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம்நின்று விட்டது போல் உணர்தேன்.


 அவன் கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என் தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன்,

ஆனால் அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான்.

நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய
பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது,
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்தஅம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும்
அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவஇடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி !!

இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண் இறந்து விட்டாள் என்று.

நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன் அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் , கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும் தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது..

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...

உங்கள் வங்கி (BANK) கணக்கில் உள்ள இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய ATM Transactionஐ வீணடிக்க வேண்டாம் !!

உங்கள் வங்கி (BANK) கணக்கில் உள்ள இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்குகோ அல்லது உங்கள் அருகில் உள்ள ATMக்கோ  செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவகளாக (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய


Advertise on www.tagavalthalam.com
Post Your Ads For Free...

வணக்கம் நண்பர்களே ....

நம்ம தகவல்தளம் இணையதளத்தில் நீங்கள் விளம்பரம் செய்யலாம்..

நம்ம தகவல்தளம் இணையதளத்தில் விளம்பரம் செய்ய tagavalthalam1@gmail.com என்ற மினஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்..

Advertise on www.tagavalthalam.com

Now promote your business here on www.tagavalthalam.com and get traffic on your website & increase your revenue.



என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.


தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;

மதுரையைக் கடக்கிறது வைகை;

நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;

தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;

திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;

என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.

வற்றாத ஒரு நதியுமில்லை;

வானளாவிய ஒரு கோவிலுமில்லை;

இதிகாசத்திலே இடமுமில்லை;

எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை;

இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....

அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.

தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார்.

இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை;

ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?

விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன;

ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.

சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.

மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.

கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்.

வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது.

எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.

பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை.

உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...

அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான்.

எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.

இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை.

அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்;

குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி';

மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை';

ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.

மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்,

அத்துப்படியான ஆங்கிலம்,

இதமான காலநிலை,

சுவையான சிறுவாணி,

அதிரடியில்லாத அரசியல்...

இவற்றையெல்லாம் தாண்டி,

அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.

புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி நடை போடுகிறது.....

அந்த பெருமையுடன் எல்லோரும் இறுமாப்பாய் சொல்வோம்...

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினாலும் மற்றும் வேறு சில காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு தற்போது சக்கர நாற்காலியில் அவர்களது வாழ்நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் எமது பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பே "உயிரிழை"
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!



இவ் அமைப்பில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளை கொண்ட இவ் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற பயனாளிகளின் நலன் கருதி செயற்பாடுகளை முன்னெடுத்து  வருகின்றது. அதன் அடிப்படையில் இங்கிலாந்தில் உள்ள ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து அவ் அமைப்பின் சிறுதுளி எனும் செயற்த்திட்டத்தின்கீழ் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று இடுப்பின் கீழாகவும் கழுத்தின் கீழாகவும் இயக்கம் இல்லாமல் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழும் பயனாளிகளுக்கான மாதாந்த உதவி தொககையினை பாதிப்பின் அடிப்படையிலும் பயனாளிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வழங்கி வருகின்றோம். 
பயனாளிகளில் இன்று  வரைக்கும் 41 பயனாளிகளிற்க்கு  மட்டுமே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது 
ஆயினும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் சாதாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வரையில் மருத்துவம்  மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று வருவதற்கான அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் தேவைப்படுகின்றது. 
எனினும் எமது  பயனாளிகள் எதிர்நோக்கின்ற பிரதானமான பிரச்சினை அழுத்தப்புண் ஆகும் தொடர்ச்சியாக சக்கர நாற்காலியினை பாவிப்பது குடும்ப சூழ் நிலை காரணமாக கவனிக்காமல் இருப்பது கட்டாயம் வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலையில் தொடச்சியான சக்கர நாற்காலி பாவனை போன்ற காரணங்களினால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்
எமது பயனாளிகள் சிலர் அழுத்தப்புண் உருவாகி மிகவும் கொடிய வலியோடு வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வாறு  பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் அழுத்தப்புண்கள் சில
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

எமது பயனாளிகள்  மருத்துவதேவைகளையும் அவர்களின் அன்றாட வாழ்கை செலவுகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள் இவர்களின்  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரப்படுகின்றார்கள் இவர்களில் சிலர்  தொழில் முயற்சிகளில் ஈடுபட முடியாதவர்களாகவும், ஏனைய குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். இதனால், அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
ஆகவே இவர்களின் தேவைகளை  ஓரளவேனும் பூர்த்தி செய்து கொள்வதற்கு நீங்களும் உங்களால் முடிந்தவரை இவர்களுக்கு  உதவலாம்.


இவர்களின் வாழ்க்கையை மாற்ற உங்களாலும் முடியும் .....



இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
வெளிநாடுகளில் வாழும் எமது சொந்தங்கள் எம்முடன் தொடர்புகொண்டு நேரடியாகவும் உங்கள் பக்களிப்பினை வழங்கலாம் அல்லது ஏற்கனவே உயிரிழையோடு இணைந்து பக்களிப்பினை வழங்கிகொண்டிருக்கும்  இங்கிலாந்தில் உள்ள மனிதாபிமான பணிகளுக்கான ஜக்கிய அறக்கட்டளை ( UNITED TRUST FOR HUMANITARIAN AID (UTHA) ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து உங்களுடைய பங்களிப்பினையும் மேற்கொள்ளலாம் 
உயிரிழை அமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் இணைந்து கொள்ளுங்கள் https://www.facebook.com/Uyirilai இதன் முலம் உங்களுக்கு தேவையான மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் 
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
Uyirilai
ஊதா அமைப்பின் இணையதள முகவரி :- http://www.utha.org.uk/

இத் தகவலினை முழுமையா படித்தமைக்கு மிக்க நன்றி 
நண்பர்களே உங்களால் இவர்களுக்கு உதவ முடியவில்லையாயின் இவர்களுக்கு உதவுவதற்கு எங்களாலும் முடியும் என்று முன்வரக்கூடிய நல்லுள்ளம் படைத்த எங்களுடைய சொந்தங்களுக்கு இத் தகவல் சென்றடைவதற்கு நீங்கள் இத்தகவலை  பகிர்வதன் (share) செய்வதன்மூலம் நீங்களும் ஒரு உதவியாளராக மாறலாம்.

நன்றி 

Neminathan Paramananthan paramananthan22@gmail.com


பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.