A+ A-

மின் சர்க்யூட் தொடர்பான விதிகளை வெளியிட்டவர்..?

 குஸ்டவ் கிர்க்காஃப்

குஸ்டவ் கிர்க்காஃப்


  • மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1824ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் பிறந்தார்.
  • கல்லூரியில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21வது வயதில் வெளியிட்டார்.
  • ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து 1854ஆம் ஆண்டு சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தார். மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
  • இவர் 1859ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். மேலும் 1862ஆம் ஆண்டு 'கரும்பொருள் கதிர்வீச்சு' பற்றிய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார்.
  • ராபர்ட் புன்செனுடன் இணைந்து சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக 'ரூம்ஃபோர்டு' பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றார்.
  • தன் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 63வது வயதில் (1887) மறைந்தார்.

மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1824ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கிழக்கு பிரஷ்ய