Vivekanandar
Vivekanandar


Vivekanandar
Vivekanandar
Vivekanandar's Top 10 அவர் கூறிய பொன் மொழிகளில் மிகவும் பிடித்த டாப் 10 உங்களுக்காக..................
1. அமைதியான மனமே உங்களின் முக்கியமான மூலதனம், அதுவே எல்லா வெற்றிகளும் கொண்டுவரும்.

2. துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்து தேய்வது எவ்வளவோ மேலானது.

3. கோழைகள் எப்போதும் வெறறி அடையமுடியாது.

4. உண்மைக்காக எதுவும் தியாகம் செய்யலாம், ஆனால் உண்மையை எதற்க்காகவும் தியாக செய்ய முடியாது.

5. நீ உன்னை பலவீனன் என்று என்றூம் சொல்லாதே, எழுந்து நில் தைரியமாக இரு.

6. வலிமையாக இரு, உன் பொருப்புகள் அனைத்தையும் நீயே சுமந்து கொள்.

7. உடலிலும், மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.

8. காயம் படாதவன் தான் தழும்பை பார்த்து நகைப்பான்.

9. சிவன் விஷ்னு என்று ஆயிரம் கடவுள் பெயர்கள் இருந்தாலும், இருப்பது ஒரே கடவுள் தான்

10. வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்கு தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்து நிற்க்கும் வீரனின் மனநிலையே நமக்கு எப்போதும் வேண்டும்.................

அமைதியான வார்த்தைகள் மூலம் வீரமும் - புரட்சியும் கொண்டு வந்த மகான்



Vivekanandar
Vivekanandar
விவேகானந்தரைப் பற்றிய முதல் மனப்பதிவு பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் மிகச் சிறிய வயதிலேயே கண்ட நாள்காட்டிப் படங்கள் வழியாகத்தான் வந்திருக்கும். புகழ்பெற்ற அமெரிக்கப் புகைப்பட நிபுணர் தாமஸ் ஹாரிசன் 1893-ல் எடுத்த படம் அது. பக்கவாட்டில் சற்றே திரும்பி, காவிநிறக் கம்பளி உடையுடன், வங்காளத் தலைப்பாகையுடன் கைகட்டி நிமிர்ந்து நிற்கும் அந்தப் புகைப்படம், ஐந்து தலைமுறை காலமாக அளித்துவரும் தன்னம்பிக்கையை எளிதில் விளக்கிவிட முடியாது. வறுமையும் மிடிமையும் ஓங்கி, பட்டினியால் மூடியிருந்த ஒரு தேசம் நமது இந்தியா. தன்னம்பிக்கை குலைந்து உலகை அஞ்சி தனக்குள் சுருண்டுகொண்ட ஒரு தேசம். அதன் இளைஞர்கள் அந்தக் கண்களைப் பார்த்தபோது தங்களை உணர்ந்தனர். விவேகானந்தரின் அந்தக் கண்களில் தெரிந்தது, உலகை எதிர்நோக்கி தலைநிமிர்ந்து நின்ற இந்திய இளமையின் தன்னம்பிக்கை. அந்தப் படம் ஒரு பெரும் படிமம். ‘வா உலகே!’ என்ற அறைகூவல் அதில் இருந்தது.

விவேகானந்தரைப் பற்றி அம்பேத்கர்

சுவாமி விவேகானந்தரைப் பற்றி நூற்றுக் கணக்கான நூல்கள் தமிழில் உள்ளன. அ.லெ. நடராஜன் எழுதிய ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நூல் முழுமையான அறிமுகம் எனலாம். பல கோணங்களில் விவேகானந்தர் விவாதிக்கப்பட்டிருக்கிறார். வேதாந்திகள், ஆச்சாரவாதிகள் எழுதிய நூல்கள். இடதுசாரிகளான ஜெயகாந்தன் போன்றவர்களின் சொற்கள். அனைவருக்கும் அவர் உத்வேகமளிக்கும் ஆளுமை. எம்.ஓ. மத்தாய் எழுதிய சுயசரிதையில் அம்பேத்கர் மத்தாயிடம் சொல்கிறார், “நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் விவேகானந்தரே. அவரில் இருந்து நவ இந்தியா ஆரம்பிக்கிறது” என்று.
விவேகானந்தர் மதச் சீர்திருத்தவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, தத்துவ சிந்தனையாளர். அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு ஞானி. ஞானிகள் நம் கையின் விரல்களைப் போல. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான பணி ஒன்று இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப அவர்களுடைய இயல்பு அமைந்திருக்கிறது. சுட்டுவிரல் போல சிலர். கட்டைவிரல் போல சிலர். சிறுவிரல் போல சிலர். ஆனால், அனைவரும் சேர்ந்து அள்ளுவது ஒன்றையே. ஆகவே, ஞானி என்றால் இப்படித்தான் இருப்பார் என்று நம் சிறிய அறிவைக் கொண்டு வரையறை செய்துகொண்டால், அதன் இழப்பு நமக்கே. ஞானம் நோக்கிய நம் தேடலின் அந்தரங்கமே அவர்களை அடையாளம் காண முடியும்.

விவேகானந்தரின் ஆப்தவாக்கியம்
இந்தியாவில் ஞானிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ‘ஊரிடும் சோறு துணிதரும் குப்பை’ என வாழும் பல்லாயிரவர் இங்கே இருந்தார்கள். அவர்களில் ஒருவர் நம் மக்களை, நம் தேசத்தை, நம் பண்பாட்டை, நம் அரசியலை நோக்கித் திரும்ப வேண்டுமென விதி இருந்திருக்கலாம். அவ் வண்ணமே வந்த ததாகதர், விவேகானந்தர். இந்த தேசத்தைத் தளையிட்டிருந்த அடிமைத்தனமும் அதன் விளைவாக நிகழ்ந்த பெரும் பஞ்சங்களும் அவர் அப்படி வருவதற்கு நிமித்தமாயின. இந்த தேசத்தில் அளிக்கப்பட்டிருந்த ஆங்கிலக் கல்வி அதற்குக் கருவியாகியது. அன்று உருவாகிவந்திருந்த ரயிலும் அச்சும் அதற்கு வாகனங்களாயின. வந்துசென்றார் அவர். இந்த மண் துயில்விட்டெழுந்தது.

அதுவே விவேகானந்தரின் பங்களிப்பு. இந்த தேசத்தில் உருவான ஒட்டு மொத்த தேசியத் தன்னுணர்ச்சியின் விதை அவரே. பட்டினியாலும் பேத சிந்தனைகளாலும் செத்து மக்கிக்கொண்டிருந்த இந்தியாவைக் கண்டு அடைந்த அறச் சீற்றத்தின் அனல்தான் விவேகானந்தரிடமிருந்து வெளிப்பட்டது. “எழுக, விழித்தெழுக, குறிக்கோள்வரை அயராது செல்க” என்ற உபநிடத வரியை அவர் இந்தியாவுக்கு அளித்த ‘ஆப்தவாக்கியம்’ எனலாம்.

நவீன சிந்தனையின் தொடக்கப்புள்ளி
அவரது எழுத்துகளில் இருந்தே இந்த தேசத்தின் அனைத்து நவீன சிந்தனைகளுக்கும் தொடக்கப்புள்ளிகளைக் கண்டுகொள்ள முடியும். இந்தியாவின் நிலவரைபடம் பற்றிய ஒரு பிரக்ஞை அவரது எழுத்துகளில் ஓடுகிறது. அதுவே இந்தியாவுக்கு அவர் அளித்த முதல் கொடை. பத்ரிநாத்தில் இருந்து கன்னியாகுமரி வரை, ஆதிசங்கரர் சென்ற திசைக்கு நேர்எதிர் திசையில் அவர் பயணம் செய்தார். அவர் வழியாக அந்த வரைபடம் அவர் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பேசப்பட்டது. நவஇந்தியா என்ற கனவு அதனூடாக முளைத்தெழுவதை அவரைச் சந்தித்த ராஜம் அய்யர் போன்றவர்கள் எழுதிய குறிப்புகள் வழியாகக் காணலாம்.
இந்திய ஆன்மிக மரபு அன்று மத வழிபாடுகள், சடங்குகள் மற்றும் ஆசாரங்களுடன் பின்னிப் பிணைந்து கிடந்தது. அந்த சிக்கலைப் பிரித்து நோக்க முடியாமல், ஒட்டுமொத்தமாக அதை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, புதியதாக உருவாக்கிவிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் பிரம்ம சமாஜம் போன்ற மத-சமூக சீர்திருத்த இயக்கங்களும், இந்திய ஞானமரபின் ஏதேனும் ஒன்றை மட்டும் மையமாக்கி, பிற அனைத்தையும் அதைச் சுற்றிக் கட்டி எழுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை கொண்ட ஆரிய சமாஜம் போன்ற இயக்கங்களும் அன்று இருந்தன.

விவேகானந்தரின் பங்களிப்பு என்பது இந்திய மெய்ஞான மரபின் சாராம்சமான விஷயங்கள் அனைத்தையும் அடையாளம் கண்டது. அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொண்டது. அதை கம்பீரமான மொழியில் இந்தியாவை நோக்கிச் சொன்னது. இந்திய மெய்ஞானத்தின் மொழி அவர் வழியாகவே சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலமாக மாறியது என்று சொல்லலாம். மடங்களிலும் குருகுலங்களிலும் இருந்த வேதாந்தம் இந்திய இளைஞர்களின் தத்துவமாக ஆகியது.

மார்க்ஸியரும் விவேகானந்தரும்
இன்றும் இந்தியச் சிந்தனையின் ஒட்டுமொத்தத்தைப் பார்க்கும் ஒரு சிந்தனையாளர், விவேகானந்தரைத் தன் ஆசிரியராக அடையாளம் கண்டு கொள்வார். மிகச் சிறந்த உதாரணம், மார்க்ஸிய தத்துவ சிந்தனையாளரான கே.தாமோதரன். மார்க்ஸிய நோக்கில் இந்திய சிந்தனையை வகுத்துரைக்க முற்பட்ட அவருக்குத் தன் உடனடி முன்னோடியாக விவேகானந்தரே தோன்றினார். இடதுசாரிகள் இன்று விவேகானந்தர் பெயரைச் சொல்ல அவரே காரணம்.
விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சியின் முதல் குரல். இடிந்து மக்கிய நமது கூரைமீது ஏறி நின்று, பொன்னிற உதயவானம் நோக்கிப் பொன்னிற இறகுகளை விரித்துச் சிறகடித்துக் குரலெழுப்பிய சேவல். இந்திய வரலாற்றாய்வின் மாதிரி வடிவம்பற்றி, இந்தியாவுக்கே உரிய கல்விமுறைபற்றி, இந்தியாவுக்கான வெகுஜன ஜனநாயக அரசியல்பற்றி முதல் சிந்தனைகளை அவரே முன்வைத்தார். இந்திய இலக்கியத்துக்கான முன்வடிவம்பற்றிப் பேசியிருக்கிறார். இந்தியக் கலைகளுக்கான அடிப்படை வடிவம்பற்றி விவாதித்திருக்கிறார். இந்தியாவுக்குரிய சுயமான கட்டடக் கலை பற்றியும், ஓவியக் கலை பற்றியும்கூட அவரே முதலில் பேசியிருக்கிறார். உதாரணமாக, இந்தியாவின் மாபெரும் முன்னோடிகள் பெரும்பாலானவர்கள். இந்திய ஓவியக் கலைக்கான அடிப்படைகளை உருவாக்கிய முதற் தூண்டுதலும் வழிகாட்டலும் அவனீந்திரநாத தாகூர் போன்றோருக்கு விவேகானந்தரில் இருந்தே கிடைத்தது.

இந்தியா என்றுமே ஞானபூமியாகக் கருதப்பட்டு வந்தது. மூத்தோரின் முதியோரின் தேசம், பழைமையின் தேசம் என்றே நம்மைப் பற்றி நாம் எண்ணியிருந்தோம். அந்த மனப்பதிவை உடைத்து பிறந்தெழுந்த இளைஞர் அவர். குழந்தைத்தன்மை நீங்காத அவரது அழகிய முகம், புதிய இந்தியாவின் சின்னமாகியது. இந்நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்தவர்கள், இங்கே உருவான புரட்சியாளர்கள், இங்கே கலையையும் இலக்கியத்தையும் உருவாக்கியவர்கள் பெரும்பாலானோர் இளமையில் தங்களை விவேகானந்தருடன் அடையாளம்கண்டிருப்பார்கள்.

இன்றும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணை கொண்டது.

நன்றி:தி ஹிந்து

ஹிட்லரே தமிழனிடம்  மன்னிப்பு கேட்ட வரலாறு .......

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது 'ஜெய் ஹிந்த்' என்ற ஒற்றை வாசகம்தான், தாய்நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்ட ஒவ்வொரு இந்தியரின் பேச்சிலும், மூச்சிலும் உறைந்துப் போய் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.



ஆனால், இந்த அற்புத வாசகத்தை உருவாக்கி, மக்களிடையே பரவச் செய்து, விடுதலைக்கான வீரத் தீப்பொறியை பரவச் செய்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற நம்பிக்கையும் இந்திய மக்களின் கருத்தில் விதைக்கப்பட்டது.


இந்த தகவலுக்கு மாறாக, 'ஜெய் ஹிந்த்' என்ற வாசகத்தை முதலில் அறிவித்து பிரகடணப்படுத்தியவர் ஒரு தமிழர் தான் என்ற அரிய செய்தியும், அந்த வீரத் தமிழனிடம் உலகையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர் மன்னிப்பு கேட்ட பெருமைக்குரிய வரலாறும் தற்போது தெரிய வந்துள்ளது.

'ஜெய் ஹிந்த் செண்பகராமன்' என்ற நூலினை வரலாற்று ஆசிரியர் 'ரகமி' என்பவர் எழுதியுள்ளார். இந்த நூலில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த பெருமைக்குரிய தமிழனின் பெரும்பங்கு ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரியில் பிறந்த செண்பகராமன் சில காலத்திற்கு பின் திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். மாணவராக இருந்த காலங்களிலேயே இந்திய விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் செண்பகராமன் ஈடுபட்டார்.

இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டு உளவாளியான 'சேர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட்', செண்பகராமனின் நடவடிக்கைகளில் இருந்த உறுதியான கொள்கைப்பிடிப்பையும், துணிச்சலையும், ஆர்வத்தையும் கண்டு பலவகைகளில் அவருக்கு உதவி செய்தார்.

அவரது உதவியுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய செண்பகராமன் இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். இத்தாலியில் இருந்த போது இத்தாலிய இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றை படித்தார். பின்னர், சுவிட்சர்லாந்திலும் படிப்பை தொடர்ந்திருக்கிறார். அதன்பின் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் பொறியியல் துறையின் டாக்டர் பட்டம் பெற்றார்.

பட்டப்படிப்புக்கு பிறகு, ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி மூலம் இந்திய விடுதலைக்கு செண்பகராமன் ஆதரவு திரட்டத் தொடங்கினார். அந்த காலக்கட்டத்தில் ஜெர்மனி மன்னர் கெய்சரின் நட்பு அவருக்கு கிடைத்தது. 1930-இல் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகராமன் நியமிக்கப்பட்டார்.

1933-இல் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி ஏற்பட்ட போது அவருடன் செண்பகராமனுக்கு நட்பு ஏற்பட்டது. 1933-இல் வியன்னாவில் நடைபெற்ற ஓர் மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸை முதன்முறையாக சந்தித்தார், செண்பகராமன். இந்திய தேசியத் தொண்டர் படை (பின் நாட்களில் இதுவே இந்திய தேசிய ராணுவமாக உருவெடுத்தது) திட்டம் பற்றி கேள்விப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ், தன்னுடைய இந்திய தேசியப் படை குறித்து செண்பகராமனுடன் கலந்தாலோசித்து இருக்கிறார்.

அந்த சந்திப்பின் முடிவில், தான் எப்போதும் சொல்லும் 'ஜெய் ஹிந்த்' என்ற மந்திர வார்த்தையை செண்பகராமன் உச்சரித்து இருக்கிறார். அந்த வாசகம் சுபாஷ் சந்திரபோசை வெகுவாக ஈர்த்தது. அதனையே தனது தேசியப்படையின் தாரக மந்திரமாக்கினார். அதுவே நாளடைவில் இமயம் வரையில் ஒலிக்க ஆரம்பித்தது.

செண்பகராமனைப் பற்றிய இன்னொரு சம்பவமும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழனின் பெருமையை உலகுக்கு பறைசாற்றூம் அந்த உன்னத சம்பவம் ஒன்று போதும்; 'தமிழன் என்று சொல்லடா-தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற அற்புத வரிகளின் முழுப் பொருளையும் நாம் உணர்ந்துக் கொள்ள முடியும்.
ஒருமுறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது "சுதந்திரம் பெறக் கூடிய தகுதி இந்தியர்களுக்கு கிடையாது" என்று கூறினார். இந்த கருத்து அருகில் இருந்த செண்பகராமனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. "இந்தியாவின் பாரம்பரியம், இந்தியத் தலைவர்களின் திறமைகளைப் பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசுவதை என்னால் அனுமதிக்க முடியாது" என்று ஆவேசமாக கூறிய செண்பகராமன், சற்றும் அஞ்சாமல் அனைவரின் முன்னிலையிலும் உலகமே பார்த்து மிரண்ட சர்வாதிகாரி ஹிட்லருடன் இதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.

அடுக்கடுக்கான ஆதாரங்களுடனான செண்பகராமனின் வாதத் திறமையை கண்டு வியந்துப்போன ஹிட்லர், இறுதியில் பணிந்தார். தன்னை மன்னித்துக் கொள்ளும்படி அவர் கேட்க செண்பகராமனோ, வார்த்தைகளால் மன்னிப்பு கேட்பதை விட எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.
இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. செண்பகராமனை கொல்ல சதி செய்து சாப்பாட்டில் விஷத்தை வைத்து அவரை கொன்றனர். செண்பகராமன் 26-5-1934 அன்று மரணம் அடைந்தார்.

"தொட்டிலில் அழும் பிள்ளைகள் கூட ஹிட்லரின் பேரைக் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும்" என ஜெர்மனியில் ஒரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்ட கொடுங்கோலனான ஹிட்லரை நேருக்கு நேராக நின்று எதிர்த்து பேசுவதென்றால் சாதாரண காரியமா?

அறிவிலும், துணிவிலும் ஈடு இணையற்ற ஓர் தமிழனாக ஜெர்மனியில் இருந்தபடி, இந்திய விடுதலைக்கு போராடிய மாவீரன் செண்பகராமனைப் பற்றி 'ஜெய் ஹிந்த்' புத்தகத்தின் வாயிலாக வரலாற்று ஆசிரியரான ரகமி, மேலும் பல அருமையாக நிகழ்ச்சிகளையும் வெளி உலகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

செண்பகராமனைப் போல் வரலாறுகளில் மறைக்கப்பட்ட பல தமிழ் மாவீரர்களை நினைத்து வேதனைப்படும் முற்போக்கு சிந்தனையாளரும், பிரபல எழுத்தாளருமான தமிழச்சி என்பவர் இந்த அரிய தகவலை சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

1
தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, கூகுள் உடன் இணைந்து செயல்படும் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது.
டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

கூகுள் உடன் இணைந்து செயல்படும் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்பா, எஸ்.என்.ஏ. ஜய்தி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி தேடு இயந்திரத் தளமான கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் திட்டத்தைக் கைவிட ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக, அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் வசம் உள்ள தகவல்களுடன் வாக்காளர்களுக்கு இணையம் மூலம் வழிகாட்டும் வகையில், கூகுள் மூலமாக மிகப் பெரிய அளவில் திட்டம் ஒன்றை செயல்படுத்த பேச்சுவார்த்தை நடந்தன.
மக்களவைத் தேர்தலின்போது அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளை கூகுள் வரைபடம் மூலம் கண்டறிவது, ஆன்லைனில் வாக்காளர் பட்டியலை தகவல்களை அறிந்து கொள்வது, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் விரைவாக வெளியிடுவது என பல்வேறு சிறப்பு வசதிகளை கூகுள் உதவியுடன் செயல்படுத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கூகுள் சார்பில் சில நாள்களுக்கு முன்பு தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
அதேவேளையில், தேர்தல் ஆணையம் வசம் உள்ள 80 கோடிக்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் பற்றிய விவரம் உள்ளிட்ட தகவல்கள், கூகுளுக்குத் தரப்பட்டால், அது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை உண்டாக்கும் என்று இணைய நிபுணர்கள் எச்சரித்தனர்.
குறிப்பாக, அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான என்.எஸ்.ஏ., இணையதளங்கள் வாயிலாக ஊடுருவி உலக நாடுகளில் வேவு பார்த்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கூகுள் உடனான திட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தது. இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாகவே, இந்தக் கூட்டுத் திட்டத்தைக் கைவிடுவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

துளசி
துளசி
துளசி
துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறுநாள் பூஜை செய்த பயனை அடைவர்.
துளசியின் மருத்துவ குணங்கள்: எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.

உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

Android Phone
உங்களின் Android Phone யை Computer இன் Mouse Keyboard ஆக பாவிப்போமா............

உங்கள் அனைவருக்கும் Android Phones பற்றி தெரியும் புதிதாக சொல்ல்வதக்கு ஏதும் இல்லை...
உங்களிடம் இருந்தால் இந்த சேவையை முழுமையாக அனுபவிக்க முடியும்..

இதில் காணப்படும் நண்மைகள்

* Mouse curser movement
* left and right click support
* Middle mouse button scroll
* Remote keyboard input
* PC/Mac hot keys and combination key(Pro only)
* Speech-to-text input for all languages
* Mouse & keyboard full screen
* Auto-connect on application startup
* Media player controller(Pro only)
* Explorer controller(Pro only)
* PPT Presentation controller(Pro only)
* Compatible with XP/Windows Vista/Windows 7/Windows 8/Mac OSX/Linux (Ubuntu)


எவ்வறு செய்வது என்று பார்ப்போம்..

முதலில் இந்த Google play software யை download செய்து உங்கள் phone இல் install செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=wsm.wifimousefree


Software யை open செய்து computer உடன் connect செய்து கொள்ளுங்கள்.

இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=zCLamhjM-0g

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும் செல்போன் தகவல் பற்றி......

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.

Madurai Meenakshi Amman Temple
Madurai Meenakshi Amman Temple

இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.

விநாயகர்
விநாயகர்
தல வரலாறு:
     மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்
 மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.
 மீனாட்சி அம்மன் கோவில்
 மீனாட்சி அம்மன் கோவில்


கட்டிடக்கலை:
   மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. பழங்கால தமிழ் நூல்களின் சான்றுகளின் படி இக்கோவில் மதுரையின் மத்தியிலும், கோவிலைச் சுற்றி உள்ள தெருக்கள் தாமரை இதழ்கள் வடிவிலும் அமைந்துள்ளனவாம்!! இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.
மீனாட்சி அம்மன் கோவில் கட்டிடகலை
மீனாட்சி அம்மன் கோவில் கட்டிடகலை 

கோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. ஒன்பது அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீ. 

இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவகோட்டை நகரத்தாரால் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது.. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது.  மேலும் மூலவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன, அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டவை.
மீனாட்சி அம்மன் கோவில் கட்டிடகலை

மேலும் இங்கு பொற்றாமரைக் குளமும் உள்ளது.  இந்தக் குளத்தில் தங்கத் தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்தக் குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை. மேலும் இந்தக் குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்தக் குளத்தில் போடவேண்டும், அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும் இல்லையேல் மூழ்கிவிடும். 
கோவிலில் உள்ள மண்டபங்கள்:
  • அஷ்ட சக்தி மண்டபம்
  • மீனாட்சி நாயக்கர் மண்டபம்
  • ஊஞ்சல் மண்டபம்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • வசந்த மண்டபம்
  • கம்பத்தடி மண்டபம்
  • கிளிக்கூடு மண்டபம்
  • மங்கையர்க்கரசி மண்டபம்
  • சேர்வைக்காரர் மண்டபம் 
இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.

சிற்பக்கலை: 
        ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.  வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன.  அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ள்ன.  இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும்.  
மீனாட்சி அம்மன் கோவில் சிப்பங்கள்
மீனாட்சி அம்மன் கோவில் சிப்பங்கள் 

    கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்ட்டுள்ளன.  சுவாமி சந்நிதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. 
திருவிழாக்கள்:
   இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது.  ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 
மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன் 

  ஆவணி மாத திருவிழா, சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை கொண்டாடும் விழாவாகும். சித்திரைத் திருவிழா, கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் திருவிழாவாகும். 

கோவில் திறந்திருக்கும் நேரம்காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.
எப்படி செல்வது?
  • மதுரைக்கு சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்து வசது உண்டு.
  • மதுரையில் ரயில் நிலையமும் உள்ளது(MDU)
  • மதுரையில் விமான நிலையமும் உள்ளது. விமான நிலையம், நகருக்கு வெளியில் அமைந்துள்ளது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.