3
கனவு:இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது

இன்று இரவு 12 மணி முதல்  இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது
என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது,

ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும்,

அது வேறொன்றும் இல்லை
மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக இத்தனை வருடங்கள்
நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது,
என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது,

தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்!

இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!

வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல,
போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது,

Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை,
இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது
உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை  bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன,
இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால் எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?!

மக்கள் எல்லோரும்  super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை பதுக்கிக்கொண்டார்கள்,

வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை தேடி ஓட ஆரம்பித்தார்கள்
IT company கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், எல்லாம் மூடப்பட்டுவிட்டன ..

கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது ..

பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது,

எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும் மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது,

நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது, நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க ....

விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!

வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி பருப்பு வாங்க நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள், உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது,

வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்குதேவையான உணவுப்பொருட்கள்சம்பளமாக வழங்கப்பட்டது ..

ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின, ..

Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள்,..

விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள், நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும்
அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது ...
வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய உலக வெப்பமயமாதல் குறைந்து பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது .

வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின,

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!

பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும், tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும் உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது,

பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,
பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது,

எல்லாம் இருந்தும் எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த மக்களை மகிழ்விப்பதற்காக ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள் திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது
ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி!

காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது
அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது!

அதனால், தயவு செய்து கரகாட்டத்தையும் குறட்டையையும் நிறுத்திவிட்டு
கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!

ஆனால் எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை !!

சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை
இந்த கனவும் அப்படித்தான கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான்
காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது,

கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!

பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது

விவசாயத்தையும் விவசாயுகளையும் காப்போம்!!!

விவசாயம் இல்லையேல் நமக்கு இல்லை சோறு ஆனால் இன்று விவசயுக்கு இல்லை வாழ்வு ...


விவசாயத்தையும் விவசாயுகளையும் காப்போம்!!!

விவசாயத்தையும் விவசாயுகளையும் காப்போம்!!!

விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு .....


பொருள் விபரப்பட்டி​யலை(Invoice) ஒன்லைனில் உருவாக்கிக் ​கொள்வதற்கு

வியாபார நடவடிக்கைகளின் போது இடம் பெறும் கொடுக்கல்- வாங்கல்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்வதற்கு பல கணனி மென்பொருட்கள் காணப்படுகின்றன.

இவை தவிர ஒன்லைன் மூலம் பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்பட்ட போதிலும், அவற்றுள் தரம் குறைவான சேவைகள், நம்பகத்தன்மையற்ற தன்மை போன்றவற்றுடன் பணம் செலுத்த வேண்டிய நிலையும் காணப்படும்.

எனினும் 100 வீதம் இலவசமானதும், சிறந்த சேவையினை வழங்கக்கூடியதுமாக Robo invoice எனும் தளம் காணப்படுகின்றது.

இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பதிவுகளை தரவிறக்கம் செய்யக் கூடியதாகக் காணப்படுவதோடு, பிரிண்ட் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.

அத்துடன் குறித்த வியாபார நிறுவனத்தின் லோகேவை தரவேற்றம் செய்து இணைக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

மேலும் இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான முற்பதிவுகளும் மேற்கொள்ள வேண்டிய அவசிம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருள் விபரப்பட்டி​யலை(Invoice) ஒன்லைனில் உருவாக்கிக் ​கொள்வதற்கு

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம் தெரியுமா உங்களுக்கு ?...

அந்த எழுதாத சட்டம் எதுக்குன்னு நான் தெருஞ்சுகிட்டாத உங்களுக்கு சொல்லுறேன் ...

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல்,
உப்பு,
கேழ்வரகு,
தினை,
வரகு,
சோளம்,
மக்கா சோளம்,
சலமை,
எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

இன்று நாம் கூறும் அறுவியல் ஆராய்ச்சியில் வெளிநாட்டுக்காரர்கள்
கூறியது ...

ஆனால் நம் முன்னோர் அதை நம் வாழ்க்கையுள் ஒரு அங்கமாகவே கடைபிடித்து வந்துள்ளனர் ..

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!!  நம் முனோரின் பெருமையை பரப்புவோம் ....!!

2
 மோட்டர் வாகனச் சட்டங்கள் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்...

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக:

1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine

3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine

4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine

5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine

6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine

7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court

8. மன நிலை,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine

9.போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine

10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine

11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .

12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine

13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine

14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine

15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine

16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine

17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine....


மேலும் இந்த சட்டங்கள் விரைவில் திருத்தும் கொண்டுவர இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் ...

நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்.....!

ஆசை பேராசை

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம்.

அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் ....

நேர்ல வந்து பக்தா என்ன வரம் வேண்டும் கேள்?” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா“கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னுகேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டுகடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டுவீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம்.

போற வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமினு பேரை சொல்லமுடியாம “குப்புமி” “குப்புமி” “குப்புமி”ன்னு சொன்னானாம்..

பாவம் கடைசிவரை அவனுக்கு ”சா” வே வரலையாம்…

சாமியின் background voice.. "வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்... "

இதுளிருந்து நாங்க சொல்ல வர்றது ஆசைப்படுங்க தப்பு இல்லை !!ஆனா பேராசை படாதீங்க இருக்கிறதும் போயிடும்..

 வழிகாட்ம் தேவதை !! மனதில் உறுதி வேண்டும்..! சிறுகதை...!!
ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது..
அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..

அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும்..

அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..

அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்..
தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது..

”நான் உன்பின்னால் வருவேன்..

நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்..

வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்…

நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..

நடந்து கொண்டே இருக்கவேண்டும்..

எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.”.எனகிறது..

முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது..
தீடிரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை ..
என்னாயிற்று..என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகிவிடுகிறான்.

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..

கிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.
.தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்..அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்..

மூன்றாமவன் அடுத்து வருகிறான்.

இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்..பின்னால் அலறல் சத்தம்..சிரிப்பொலி..இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்..

நீதி: பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது

நன்றி:
Jeeva Sindhu

விநாயகரின் உருவம் பொறித்த வெளிநாட்டு தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்

இந்து மதம் பெரிதும் பரவியிருக்காத வெளிநாடுகளில் விநாயகரின் உருவம் பொறித்த தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியமான செய்திதான்...

விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இருந்துள்ளது. இப்போதும் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இந்துமத கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். நேபாளம், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகள் வெளியிட்ட தபால் தலையில் விநாயகர் உருவம் உள்ளது. இதில் லாவோஸ் என்பது, பர்மா, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடாகும். சில நாடுகளின் ரூபாய் நோட்டுக்களிலும் விநாயகர் இடம்பிடித்துள்ளார்.

விநாயகரின் உருவம் பொறித்த வெளிநாட்டு தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்



இது எப்படி சாத்தியம் என்று வரலாற்றை புரட்டிப்பார்க்கும் போதுதான் நமக்கு நம் தமிழ் மன்னர்களின் வீரவரலாறு தெரிகிறது.அந்த வரலற்ட்ரை பார்த்தபோது ராஜராஜசோழன், ராஜேந்திர சோழ மன்னர்களின் படையெடுப்புகளும், பிற்காலத்தில் வணிகத் தொடர்புகளுமே தெற்காசிய நாடுகளில் இந்து கலாச்சாரம் பரவக் காரணம்”

தாய்லாந்து நாட்டின் 10 பாட் நாணயத்தில் விநாயகர் உருவம் உள்ளது. அதேபோல, இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளிலும் விநாயகர் படம் உள்ளது. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாகும்.

அங்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். இருப்பினும், அந்நாட்டில் இந்துக்கள் அதிகம் வாழ்கிற பாலி தீவில், செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார். எனவே, இந்தோனேசிய அரசு விநாயகர் உருவம் பதித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

வாபஸ் பெறப்பட்ட விநாயகர் நோட்டு!

இந்தோனேசியா உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்க்கும் மக்கள் அதிகம் கொண்டநாடு என்பதால், அங்கு விநாயகர் உருவத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பின்னாட்களில் அரசே அவற்றை திரும்பப் பெற்றுவிட்டது. எனவே, விநாயகர் படம் பொறித்த இந்தோனேசிய ரூபாய் நோட்டு அரிய பொக்கிஷமாகி விட்டது.


லாவோஸ் நாட்டில் விநாயகருக்கு மட்டுமின்றி சரஸ்வதி, பிரம்மா, நாககன்னிக்கும் தபால்தலை வெளியிடப் பட்டுள்ளது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.