A+ A-

“ஜுராசிக் பார்க்” பாகம் 4: அடுத்தவருடம்!


ஜுராசிக் பார்க் திரைப்படம் பார்க்காதவர்கள் இருப்பார்களா என்ன?. உலகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய படமாயிற்றே!

இதற்கான ஜுராசிக் பார்க் பாகம் 4 அடுத்த வருடம் வெளிவரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது ஜூன் 13ஆம் தேதி 2014 தான் இதன் வெளியிடும் நாளாம். இதை அமெரிக்காவின் மிகப்பெரிய படத்தயாரிப்பு நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

மேலும் இந்த ஜுராசிக் பார்க்கின் பாகத்தை 3டியில் வெளியிட திட்டமிட்டுள்ளனராம். இந்தப்படத்தின் திரைக்கதையை ரிக் ஜப்பா மற்றும் அமன்டா சில்வர் எழுதுகின்றனர். இயக்கப்போவது ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் இல்லையாம்! பாகம் 2 மற்றும் 3 இயக்கியவரே இதையும் இயக்குகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்கினால் தான் படம் 8 மாதங்கள் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. கடைசிநேரத்தில் பின்வாங்கியுள்ளார் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்.

மேலும் இந்த திரைப்படம் ஐமேக்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறதாம்.

பழைய ஜுராசிக் பார்க் ஒரு பார்வை:

ஜுராசிக் பார்க் (Jurassic Park) என்பது 1993 ஆம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க அறிவியல் சார்ந்த திகில் நிறைந்த திரைப்படம் ஆகும். இதே பெயரில் மைக்கேல் கிரைட்டனால் எழுதப்பட்டு வெளியான ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இதில் சாம் நீல், லாரா டென், ஜெப் கோல்டுப்ளும், ரிச்சர்ட் அட்டென்பாரோ, மார்டின் பெர்ரீரோ, மற்றும் பாப் பெக் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிக்காவின் அருகில் அமைந்துள்ள தீவினில் நிகழ்வதாக தொடங்குகிறது. அந்த தீவினில் ஒரு கோடிஸ்வரர் அவரது ஆராய்ச்சி கூடத்தில் முற்காலத்தில் வாழ்ந்த டைனோசர்களை நவீன அறிவியலின் துணையுடன் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள். அவற்றை கொண்டு ஒரு பொழுதுபோக்கு பூங்காவுடன் இணைந்த மிருககாட்சி சாலை அமைக்க திட்டமிடுகிறார்கள்.

இந்த திரைப்படம் கணினியால் உருவாக்கப்பட்ட உருவங்களால் எடுக்கப்பட்ட ஒரு அனிமேஷன் படங்களின் வரிசையில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது. இந்த படத்தின் வெளியீட்டின் பொழுது உலகம் முழுவதிலும் $914 மில்லியன்களை வசூலித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் தற்போது அதிக வசூலை குவித்த படங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தில உள்ளது.

jurassic-park