A+ A-

SMS-களை சுவற்றிலிருந்தும் ‘டைப்’ செய்யலாம்: கூகுளின் புதிய ஐடியா


இனிமேல் எஸ்எம்எஸ்-களை மொபைல் மற்றும் டேப்லெட்களில் மட்டுமல்லாது நமது வீட்டுச் சுவற்றில்கூட டைப் செய்யலாம். இதற்காக கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு யோசனையை தனது முந்தைய ப்ராஜெக்ட்டுடன் இணைத்துள்ளது.

கூகுள் ஏற்கெனவே ‘ப்ராஜெக்ட் கிளாஸ்’ என்ற கண்ணாடியை உருவாக்கிவருவது நினைவிருக்கலாம். அந்த ப்ராஜெக்ட் கிளாசுடன் இந்த புதிய முறையையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

SMS-களை சுவற்றிலிருந்தும் ‘டைப்’ செய்யும் முறையானது லேசர் கிபேட் என அழைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் நீங்கள் மொபைல் போன் மட்டுமல்லாது எங்குவேண்டுமானாலும் டைப் செய்து அதை எஸ்எம்எஸ் மற்றும் சாதாரண தரவுகளாகவும் மாற்றமுடியும்.

ஆனால் இதற்காக கூகுளின் விசேஷ கண்ணாடி மற்றும் கைகளுக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ளதை போல சில விசேஷ முறைகளை பின்பற்றவேண்டும். ஆரம்ப நிலையிலுள்ள இந்த சிறப்பு சாதனங்கள் அடுத்த வருடம் வெளியிடப்படலாம் எனத்தெரிகிறது.

இனிமேல் எஸ்எம்எஸ்-களை மொபைல் மற்றும் டேப்லெட்களில் மட்டுமல்லாது நமது வீட்டுச் சுவற்றில்கூட டைப் செய்யலாம். இதற்காக கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு யோசனையை தனது முந்தைய ப்ராஜெக்ட்டுடன் இணைத்துள்ளது. கூகுள் ஏற்கெனவே ‘ப்ராஜெக்ட் கிளாஸ்’ என்ற கண்ணாடியை உருவாக்கிவருவது நினைவிருக்கலாம். அந்த ப்ராஜெக்ட் கிளாசுடன் இந்த புதிய முறையையும் அறிமுகப்படுத்தவுள்ளது.