A+ A-

பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறை

பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறை


பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறை

பத்மநாபசுவாமி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பகவான் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும்.

இந்த பத்மநாபசுவாமி கோயில் திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலுடன் அதிக அளவில் ஒத்துள்ளது. இந்த கோயிலின் பெயரிலேயே கேரள மாநிலத்தின் தலைநகருக்கு திருவனந்தபுரம் என்று பெயர் வந்தது.

 அதன் கட்டுமானம், வரலாறு பொக்கிஷம் என பெரும்பாலானவை நமக்கு தெரிந்தவைதான்.

இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலை தூங்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளதாக கருத்து உண்டு. 

அதாவது அந்த சிலை விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பதை போன்று இருக்கிறது.

கலியுகம் தொடங்கி சரியாக 964 நாள்கள் கழித்து இந்த கோயில் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. அப்படி பார்க்கையில் இந்த கோயில் நமக்கு சொல்லவருவது என்ன என்பது கேட்பவருக்கு மர்மமாகவும், அச்சமாகவும் உள்ளது. இந்த கோயில் பற்றி கேள்விப்படுபவர்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதி கொள்கின்றனர். கோயிலின் ரகசிய அறைகள் 5ல் மூன்று மட்டுமே திறக்கப்பட்டது. அதில் இருந்த தங்கம், வெள்ளி, வைர வைடூரிய நகைகளின் மதிப்புகள் கணக்கிட்டபோது அதன் மொத்த மதிப்பு அனைவரையும் தள்ளாடச் செய்தது. கிட்டதட்ட 2 லட்சம் கோடி மதிப்புள்ள பொருள்கள் ஒரு கோயிலில் முடங்கியுள்ளது தெரிந்தது பல்வேறு தரப்பினர் இதை நாட்டுக்காக பயன்படுத்தவேண்டும் எனவும், சிலர் இது மன்னர் சொத்து கோயிலுக்கு மட்டுமே சொந்தம் எனவும் கூறிவந்தனர்.

அப்போதுதான் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது கடைசி அறையில் கிடைக்கப்போகும் மொத்த மதிப்பு இந்த நான்கு அறைகளிலும் பல மடங்காகும்.

சேம்பர் பி என அழைக்கப்படும்  அந்த அறை மற்ற அறைகளைப் போலல்லாது பத்மநாபசுவாமியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

மர்ம அறை திறக்கப்படாததன் மர்மம் :

இந்த மர்ம அறை திறக்கப்பட்டால் உலகம் அழியும் என பத்மநாபசுவாமியின் பக்தர்கள் திடகாத்திரமாக நம்புகின்றனர். இதனால்தான் திறக்க மறுக்கின்றனர்..