A+ A-

Mr Bean வாழ்க்கை கதை..!

Mr Bean  வாழ்க்கை கதை


பிறந்த இடம் மற்றும் ஊர்:

இவரின் இயற்பெயர் ரோவன் செபாஸ்டின் அட்கின்சன் (Rowan Sebastian Atkinson). இவர் 1955 - ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 6-ஆம் தேதி United Kingdom -ல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்கிறார்.

 சிறப்பு:

1.ஆங்கிலேய நகைச்சுவையாளர் (physical comedy) 

2.நடிகர்

3.எழுத்தாளர்

4.மேடை சிறப்புரை 

5.தொலைக்காட்சி

6.வானொலி

பள்ளிப் பருவம்:

மிகவும் குழந்தைத்தனமான ஒருவர். சிறுவயதிலேயே அவர் பல நகைச்சுவைகளை செய்து கொண்டு இருப்பார்.  செயின்ட் பீஸ் பள்ளியைத் தொடர்ந்து டர்ஹாம் சொரிஸ்டெர்ஸ் பள்ளியில் கல்வி பயின்றார்.இவர் படிக்கும் பள்ளியில் கூட நாடகம் மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்த நகைச்சுவை செய்துகொண்டே இருப்பார். இவர் செய்யும் நகைச்சுவைகளை "நல்லா இல்ல" என்று பலர் சிரித்துக் கொண்டே கூற அவர் மனமுடைந்து நண்பர்களை விட்டு விலகி தனிமையில் இருந்திருக்கிறார். 

கல்லூரி வாழ்க்கை:

மேலும் இவர் நியூகேஸ்டில் பல்கலைகழகத்தில் மின்பொறியியல் பயின்றார். பின்னர் தான் குவின்ஸ் கல்லூரி ஆக்ஸ்போர்டில் எம்எஸ்சி (M.sc) படித்தார். 1976 ஆம் ஆண்டு எடின்பர்க் பெஸ்டிவல் ஃப்ரிட்ஜில் அவர் முதல் முறையாக கவனிக்கப்பட்டார். ஆக்ஸ்போர்டில் யுனிவர்சிட்டி  கிராவிட்டி சொசைட்டி (OUDS) , ஆக்ஸ்போர்ட் ரெவன்நியூ எக்பெரிமெண்ட்ல் தியேட்டர்  கிளப் (ETC) ஆகியவற்றுக்கான முந்தைய திட்டங்களை அண்ட்சன் நடித்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர் சிறுவயதில் செய்த (mr.Bean) அந்த நகைச்சுவைகளை செய்து காண்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்தமாக கதை எழுதி அவரே அதை இயக்கம் செய்து நண்பர்களுடன் சேர்ந்து அதை நடித்துக் காண்பித்தார். இதைப் பார்த்த அனைவருமே அவரைப் பாராட்டினர். அப்போது எழுத்தாளர் ரிச்சர்ட் கர்டிஸ், இசை அமைப்பாளர் ஹோவர்டு குட்டால் ஆகியோர் சந்தித்தார். அங்கிருந்துதான் Mr.Bean என்ற நாடகம் உருவானது.

வாய்ப்பு கொடுத்த வானொலி: 

 இதை விடப் பெரியதாக ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த இவரும் இவருடைய நண்பர்களும் இருந்தன. 1978 ஆம் ஆண்டில் பிபிசி(BBC) ரேடியோல் வாய்ப்பு கிடைக்கிறது.  இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அங்கு பல நிகழ்ச்சிகளை செய்து செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சியின் பெயர் "அட்டின்சன் பீபில்". அதனால் பிரிட்டிஷ் அளவில் இவர்கள் பிரபலமானார்கள். 

தொலைக்காட்சி பயணம்:

பிறகு இவருக்கு ஒரு தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆக்சன் டோ டோன் இன் வேடிக்கையான மனிதராக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் படம் பிடித்து விட்டது இந்த நிகழ்ச்சியானது வெற்றி அடைந்ததை தொடர்ந்து 1879 ஆம் ஆண்டு கேட்பார்கள் என்ற அழைக்கப்பட்ட ஐடிவி காண முதல் பகுதி முன்னோட்ட தொடர் இடம்பெற்றார் தொடங்கி பல நிகழ்ச்சிகளை செய்துகொண்டுள்ளார். 

திரைப்படம் பயணம்:

இதைத்தொடர்ந்து 1883ம் ஆண்டில் அதிகாரபூர்வமற்ற ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் "நெவர் சே நெவர்" ஒரு துணைப்பாத்திரத்தில் நடித்தார். 

அதைத்தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு டால் கை திரைப்படத்தில் நடித்தார். 

1990 - ஆம் ஆண்டில் கோல்டு த விட்சஸ் திரைப்படத்தில் நடித்தார். 

1993 - ஆம் ஆண்டில் ஹேமன் பாத்திரத்தில் நடித்தார்.

1994 - ஆம் ஆண்டு வெற்றியான போர் வெட்டிங்ஸ் அண்ட் எ புனேரலில் வாய்மொழியான கிராம பாதிரியாராக நடித்த போது ஆட்கின்சன் மேலும் அங்கீகாரம் பெற்றார். 

Mr. Bean பெயர் எப்படி உருவானது:

இவர் இந்த நாடகத்தை உலகம் முழுவதும் ஒளிபரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தனர். அப்பொழுது இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற குழப்பத்தில் இருந்தனர் அப்பொழுது மிஸ்டர் காலிபிளவர் (Mr. Coliflower) என்ற பெயர் வைக்கப்பட்டது பின்னர் அதை மாற்றி மிஸ்டர் ஒயிட் ( Mr. White) என்று வைக்கப்பட்டது. இந்த வார்த்தைகள் அனைத்தும் பெரிதாக இருப்பதாலும் ஒரு புதிய வார்த்தை உருவாக்க வேண்டும். அது சிறியதாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்துடன் கடைசியாக மிஸ்டர் பீன் ( Mr. Bean) என்று வைக்கப்பட்டது. இந்த பீன் ( bean) என்ற வார்த்தையை உச்சரிக்க மிகவும் கஷ்டப்பட்டார். இதையே சவாலாக ஏற்றுக்கொண்டு நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் மிஸ்டர் பீன்( Mr Bean) 

Mr.Bean நிகழ்ச்சிகள் :

மிஸ்டர் பீன் (Mr.bean) 1990 to 1995 வரை மொத்தம் ஒரு சீசன் (season) மட்டுமே எடுக்கப்பட்டது. 15 நிகழ்ச்சிகள் (episode)  மட்டுமே  வெளியிடப்பட்டது. நாம் மொத்தம் இந்த 15  நிழ்ச்சிகளை மட்டுமே தான் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

திருமணம் மற்றும் சொத்து மதிப்பு:

இவர் பிபிசியில் வேலை பார்க்கும் பொழுது அங்கு பணிபுரியும் ஒரு மேக்கப் அசிஸ்டன்ட் ஐ திருமணம் செய்து கொள்கிறார். அவரின் பெயர் சாஸ்திர. Mr bean எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார் அது உறவினர்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி. இவரின் சொத்து மதிப்பு ரூபாய் 1000 கோடிக்கு மேல் ஆகும். 

இனிமேல் நான் நடிக்கப்போவதில்லை:

தனது 57 வயதில் இவர் தான் இனிமேல் நடிக்கப்போவதில்லை என்று கூறினார். அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கும் பொழுது எனக்கு 50 வயதிற்கு மேல் ஆகிறது. இன்னும் நான் இந்த குழந்தைத்தனமான விஷயத்தை செய்து கொண்டிருந்தாள் எனக்கு ஒரு மரியாதையும் மதிப்பும் குறைந்துவிடும் என்று இவர் கூறியுள்ளார். 

 கார் மீது கொண்ட காதல் :

இவர் கார் ஓட்டுவதிலும் வாங்குவதிலும் மிகவும் ஆர்வம் காட்டி உள்ளார். இவர் பல  கார் ரேஸ்களில் (Car race) பங்கேற்று உள்ளார். அதில் ஒரு பெரிய கார் விபத்து நடந்துள்ளது. அதனால்  சில நேரங்களில் நடிப்பதில் சிரமம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இவர்  காரின் மீது கொண்ட காதலால் அந்த நாட்டில் உள்ள பல கார்களையும் வாங்கி வைத்துள்ளார். இன்னும் இந்த கார் வாங்குவதை இவர் நிறுத்துவதில்லை.  தற்பொழுது அனைத்து கஷ்டங்களையும் தாண்டி தான் இவர் வாழ்ந்திருக்கிறார். 

 இவர் பெற்ற விருதுகள்:

1980 - ஆம் ஆண்டு BCC யின் தனிமனிதனுக்கான வெரை டிட்லப் விருது.

1989 - ஆம் ஆண்டு BAFTA சிறந்த ஒளிப்  பொழுதுபோக்கு நடிகர்.




பிறந்த இடம் மற்றும் ஊர்: இவரின் இயற்பெயர் ரோவன் செபாஸ்டின் அட்கின்சன் (Rowan Sebastian Atkinson). இவர் 1955 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி Unite