A+ A-

வாழ்க்கையை மாற்ற உதவும் 5 வழிகள்

                                    வாழ்க்கையை மாற்ற உதவும் 5 வழிகள்


1. கோபம் 

 உங்கள் வாழ்க்கையில், கோபத்தால் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள், நீங்கள் கொள்ளும் கோபமே உங்களை மறைமுகமாக தண்டிக்கும். ஆகையால், வாழ்வில் கோபம் கொள்ளாமல் கூலாக வாழ முயலுங்கள்!

2.உணருங்கள்

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்; உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!

3.எண்ணங்கள்

உங்கள் எண்ணங்கள் உயர்வாக இருந்தால், நீங்கள் வாழ்வில் உயரத்தை அடைவதோடு, நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்வு கிடைக்கும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - என்ற கோட்பாட்டை கடைபிடிக்க முயலுங்கள்.

4.வழி 

மற்றவர்கள் பின்பற்றிய வழியை பின்பற்றி சென்று வெற்றி காண்பது சாதாரணம்; உங்களுக்கென நீங்களே ஒரு தனிப்பாதை அமைத்து, அதை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவதே அசாதாரணம். சாதாரண விஷயத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், அசாதாரண விஷயத்தை உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்று எண்ணி செயல்படுங்கள்!

5.பயம் 

 வாழ்வில் பயம் எனும் உணர்வே கொள்ளாமல், நாளையை பற்றிய, எதிர்காலம் குறித்த பயங்களை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையை அதன் போக்கில், அந்தந்த நிமிடங்களில் வாழ்ந்து பாருங்கள், வாழ்வின் அழகான மாற்றத்தை உங்களாலேயே உணர முடியும்.


நம்   வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும்..!

ஆனால்  ஒரே  நாளில் எல்லாம் மாறாது ..!