A+ A-

சார்லஸ் ஹென்றி டர்னர்

 சார்லஸ் ஹென்றி டர்னர்

சார்லஸ் ஹென்றி டர்னர்

  •  உயிரியலாளரும், கல்வியாளருமான சார்லஸ் ஹென்றி டர்னர் 1867ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியில் பிறந்தார்.
  •  முதுகெலும்பில்லாத உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் குறிப்பாக பூச்சிகளின் கேட்கும் திறன், காட்சித் திறன் மற்றும் அவற்றின் கற்றல் திறன், வேட்டையாடும் திறன் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
  •  தனது ஆராய்ச்சிகள் குறித்து 49 கட்டுரைகளை இவர் வெளியிட்டுள்ளார். பூச்சிகள் ஓசைகளின் தன்மைகளுக்கு ஏற்ப எதிர்வினை புரிவதையும் கண்டறிந்தார்.
  •  பூச்சிகள் முந்தைய அனுபவங்கள் வாயிலாகத் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என்பதையும் கண்டறிந்தார். விஞ்ஞான ஆராய்ச்சிகள் தவிர, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமூக மேம்பாட்டுக்காகவும், கல்வி அறிவு பெறவும் இவர் கடுமையாகப் போராடினார்.
  •  விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரான இவர் தனது 56வது வயதில் (1923) மறைந்தார்.

உயிரியலாளரும், கல்வியாளருமான சார்லஸ் ஹென்றி டர்னர் 1867ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியில் பிறந்தார்.