சவுதி அரேபியவில் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் போதை மருந்து கடத்தல், கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.![சவுதி அரேபியவில் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vd0UhmxUfKxdWBTvztmwNRKWotT_kDBXwQw7JMmLYPaa32Fsn6QCtQhlteK3IZhqT3sg8a-hib4VWTdZWhrEsUd516zt3E3qGJ_eu_vL4eq-b4bjzMD1PVapK-tfIKcFAOM4XpJfkGxRimrtOnrM9IIiCA41Ome5DJPcG5B9UYm9serFuBdA=s0-d)
அந்த வகையில் சமீபத்தில் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியரின் தலை துண்டிக்கப்பட்டது. அவரது பெயர் முகமது ஷாகீர்கான். இவர் பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பெருமளவில் ஹெராயின் போதை மருந்து கடத்தி வந்தார்.
அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தகவலை சவுதி அரேபியாவின் உள்துறை மந்திரி தெரிவித்தார். சவுதி அரேபியாவில் கடந்த ஜனவரி முதல் இதுவரை போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 73 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 பேர் குறைவாகும்.
கருத்துரையிடுக