A+ A-

நரேந்திரமோடிக்கு விசா வழங்கப்படுமா?: அமெரிக்கா பதில்

வாஷிங்டன், டிச.5-
நரேந்திரமோடிக்கு விசா வழங்கப்படுமா?: அமெரிக்கா பதில்

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மூண்ட இனக்கலவரங்களை முதல்-மந்திரி நரேந்திரமோடி தடுக்கத்தவறி விட்டதாக அமெரிக்கா கருதி, அவருக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது.

இப்போது அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி (தென், மத்திய ஆசியா) நிஷா தேசாய் பிஸ்வால், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் "நரேந்திரமோடிக்கு அமெரிக்கா விசா வழங்குமா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அமெரிக்காவின் விசா கொள்கையில் மாற்றம் இல்லை. விசாவுக்கு யார் விண்ணப்பித்தாலும், அவர்களது விண்ணப்பங்கள் ஒவ்வொன்றின் மீதும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்" என பதில் அளித்தார்.

தொடர்ந்து மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், "இந்திய பாராளுமன்றத்தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி பெற்றாலும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது" என கூறினார்.

நரேந்திரமோடிக்கு விசா வழங்கப்படுமா?: