A+ A-

காங்கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான்

4 மாநில தேர்தல் முடிவு காங்கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பற்றி?அந்த மாநிலங்களில்- இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக் கெல்லாம் என்னுடைய வாழ்த்துகள்.இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது. காங்கிரசைப் பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான்.ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்ற அராஜகங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். 

அதற்குப் பிறகும் கணிசமான வாக்குகள் திமுகவிற்கு கிடைத்திருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் உங்கள் புகார்களைக் கண்டு கொள்ளவில்லையே?தேர்தல் ஆணையம் முதல்வரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் கண்டனம் தெரிவித்திருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஏற்காடு இடைத்தேர்தல் அராஜகங்களைப் பார்க்கும்போது, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி என்ற நிலை இருக்கிறதே?ஆளுங்கட்சியின் அராஜகங்களைத் தடுக்க முடியவில்லையே, என்ன செய்வது!இதற்கு முடிவுதான் என்ன?உங்களைப் போன்ற பத்திரிக்கைக்காரர்கள் இதைப் பற்றி விளக்கி எழுத வேண்டும். அப்படித் துணிந்து எழுதினால் பயன் கிடைக்கும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

காங்கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான்