A+ A-

வான வீதியில் உலவும் 5 கிரகங்களில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு

புளோரிடா, டிச.5–
அமெரிக்காவில் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் பூமிக்கு வெளியே உள்ள கோள்களில் தண்ணீர் இருக்கிறதா என்று நீண்டகாலமாக ஆய்வு நடத்தி வந்தனர்.வான வீதியில் உலவும் 5 கிரகங்களில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு
இந்த ஆய்வின் அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் பூமிக்கு வெளியே 5 கோள்களில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வானவீதியில் ஏராளமான சூரியன்கள் உள்ளன. இந்த சூரியனை சுற்றி பூமியை போன்ற ஏராளமான கிரகங்களும் இருக்கின்றன. இதுபோல் 5 கிரகங்களில் அவர்கள் தண்ணீர் இருப்பதாக கூறுகின்றனர்.
அதில் வாஸ்ப் 17 பி என்ற கிரகத்தில் மிக பெரிய அளவிலான தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்கா அனுப்பியுள்ள ஹப்பிள் தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய பல்வேறு படங்களின் மூலமாக இந்த ஆய்வை செய்துள்ளனர்.
இதுசம்பந்தமாக விண்வெளி விஞ்ஞானிகள் கூறும்போது, இந்த 5 கோள்களில் மட்டும் அல்ல இன்னும் பல கோள்களில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

வான வீதியில் உலவும்