A+ A-

ஆன்ட்ராய்டின் அடுத்த புதிய இயங்கு தளத்திற்கு பெயர் சூட்டும் இந்தியர்கள்


ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் இந்தியாவில் 500 சதவீதம் வளர்ந்திருப்பதாக சமீபத்தில் கூகுள் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஒரு சில தீவிர ஆன்ட்ராய்டு ரசிகர்கள் கூகுள் வெளியிடவிருக்கும் அடுத்த புதிய ஆன்ட்ராய்டு வெர்சனுக்கு இந்திய பெயரான கஜூ கட்லி என்ற பெயரை சூட்ட வேண்டு்ம் என்று கூகுளுக்கு பரிந்துரைக்கின்றனர்.


இதற்காக ஒரு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி இருக்கின்றனர். மேலும் இந்த  இயக்கத்திற்கு இதுவரை 2075 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதுவரை கூகுள் ஆங்கில எழுத்துக்களின் வரிசையைப் பின்பற்றி ஆன்ட்ராய்டு இயங்கு தளங்களை வெளியிட்டது.
சி-கப்கேக், டி-டுனட், இ-எக்லெயர், ஜி-ஜிஞ்சர்ப்ரீடு, எச்-ஹனிகோம்ப், ஐ-ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் மற்றும் ஜே-ஜெல்லிபீன் என்று வரிசையாக கூகுள் வெளியிட்டது. எனவே கூகுள் தனது அடுத்த ஆன்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு கே என்ற எழுத்தில் தான் பெயர் சூட்டும் என்று இந்திய ரசிகர்கள் யூகம் செய்திருக்கின்றனர். அதனால் கே எழுத்தில் தொடங்கும் இந்திய பெயரான கஜூ கட்லி என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றனர்.
கஜூ கட்லி என்றால் இனிப்பு அல்லது இனிமை என்று பெயர். எனவே கூகுளின் அடுத்த ஆன்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு இந்த பெயர் மிக பொருத்தமாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். கூகுள் இந்திய ரசிகர்களின் பரிந்துரையை ஏற்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.