A+ A-

யுனைடட் இந்தியா வாடிக்கையாளர்கள் இனி மொபைல் மூலம் பிரிமியம் தொகையை கட்டலாம்


பொதுத் துறை நிறுவனமான யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியை அறிவித்திருக்கிறது. அதாவது இனிமேல் வாடிக்கையாளர்கள் தங்கள் பிரிமியம் தொகையை மொபைல் வழியாகச் செலுத்தலாம் என்ற அறிவிப்பை யுனைடட் இந்தியா வெளியிட்டிருக்கிறது.


2011 – 12ல் யுனைடட் இந்தியா ரூ.8,179 கோடி பிரிமியம் தொகையை வசூல் செய்தது. தற்போது மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்காத இந்த மொபைல் சேவையை இந்த நிறுவனம் முதன் முதலாக அறிமுகம் செய்திருக்கிறது. அதற்கு பெரிய வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
யுனைடட் இந்தியாவிற்கு 2 கோடி மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த மொபைல் சேவையின் மூலம் 5 முதல் 7 சதவீதம் வரையிலான இதன் வாடிக்கையாளர்கள் இந்த மொபைல் சேவையைப் பயன்படுத்துவர் என்று இந்நிறுவனத்தின் முக்கிய அலுவலர் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த சேவையின் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களைப் பெறமுடியும் என்றம் இதன் மூலம் பிரிமியம் தொகையை இன்னும் அதிகம் வசூல் செய்யமுடியும் என்றும் அவர் கருதுகிறார்.