A+ A-

இந்தியாவில் கேலக்ஸி ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் கேமராவை வழங்கும் சாம்சங்

கணினி உலகில் முடிசூடா மன்னனாக இருந்து வரும் சாம்சங் கேமார உலகத்திலும் தனி முத்திரையைப் பதித்திருக்கிறது. அந்த வகையில் சாம்சங்கின் கேமராக்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உண்டு.
இந்த நிலையில் தற்போது சாம்சங் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் அமைந்து ஒரு புதிய கேலக்ஸி கேமராவை இந்தியாவில் அடுத்த மாதம் களமிறக்க இருக்கிறது. குறிப்பாக தீவாளி திருவிழாவை முன்னிட்டே இந்த கேமராவைக் களமிறக்க இருக்கிறது.
இந்தியாவில் கேலக்ஸி ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் கேமராவை வழங்கும் சாம்சங்

பல தொழில் நுட்பங்களுடன் வரும் இந்த கேமரா 16எம்பி சென்சாரைக் கொண்டிருக்கிறது. மேலும் 1.4 ஜிஹெர்ட்ஸ் க்வாட் கோர் எக்ஸினோஸ் ப்ராசஸர், 4.8 இன்ச் எஸ்-எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 3ஜி இணைப்பு போன்ற வசதிகளும் இந்த கேமராவில் இருக்கும்.
இந்த கேமராவில் எடிட்டிங் வசதிக்காக ஆட்டோ க்ளவுடு பேக்அப், பெஸ்ட் க்ரூப் போஸ் மற்றும் ஸ்மார்ட் ப்ரோ மோட் போன்ற வசதிகளும் உள்ளன. அதோடு இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டும் உள்ளது. இதன் பேட்டரி இந்த கேமராவிற்கு நீடித்த இயங்கு நேரத்தையும் வழங்குகிறது.
இந்தியாவில் இந்த கேமராவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பலாம்.

கணினி உலகில் முடிசூடா மன்னனாக இருந்து வரும் சாம்சங் கேமார உலகத்திலும் தனி முத்திரையைப் பதித்திருக்கிறது. அந்த வகையில் சாம்சங்கின் கேமராக்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உண்டு.