A+ A-

ஏ.டி.எம்., மூலம் பொது காப்பீட்டு திட்டங்களை பெறலாம்


காப்பீடு செய்வதற்கு காப்பீட்டு அலுவலகங்களுக்கு செல்வதைக் குறைப்பதற்காக, ஏ.டி.எம்., மூலம் காப்பீடு செய்யும் "இ-கியோஸ்க்' என்ற புதிய முறையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், இதற்கான ஏ.டி.எம்., மையத்தை துவக்கியுள்ளது.

ஏ.டி.எம்., மூலம் பொது காப்பீட்டு திட்டங்களை பெறலாம்
மருத்துவ காப்பீடு:மருத்துவம், மோட்டார், தீ, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெறும் காப்பீடு, தொழிற்சாலைகள் காப்பீடு, பயணக் காப்பீடு போன்ற பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அளிக்கிறது. இதற்கான காப்பீடுகளை இதுவரை அலுவலகங்கள் மூலம் செய்து வந்தனர்.
விண்ணப்பம்:தற்போது, விரைவாகக் காப்பீட்டைச் செய்யவும், அதற்கான செலவுகளைக் குறைக்கும் வகையிலும் ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் காப்பீடு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.காப்பீடு செய்ய விரும்புபவர்கள், இந்த இயந்திரம் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். ஏ.டி.எம்., இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். 

எந்த மாதிரியான காப்பீட்டை செய்ய விரும்புகிறீர்களோ, அந்த காப்பீட்டின் விவரங்களும், அதற்கான விண்ணப்பங்களும் தனித் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

இதில், விவரங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். காப்பீட்டுக்கான, பிரிமியத் தொகையை, வங்கி ஏ.டி.எம்., அட்டைகள் மூலம், இந்த இயந்திரத்தின் மூலமே செலுத்தி விடலாம்.விண்ணப்பித்தல், பிரிமிய தொகை செலுத்துதல் ஆகிய நடைமுறைகள் முடிந்ததும், காப்பீட்டு பாலிசி வேண்டுமா என்ற வேண்டுகோளை ஏ.டி.எம்., இயந்திரம் கேட்கும். "ஆம்' என்று வேண்டுகோளை ஏற்றுக் கொண்டால், பாலிசி உடனடியாக ஏ.டி.எம்.. இயந்திரத்திலிருந்து கைக்கு வந்துவிடும். இந்த புதிய வசதி மூலம், தனி நபர் ஒருவர், தான் விரும்பும் காப்பீட்டை, அவரே செய்து கொள்ளலாம்.

ஆதாரம்:இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ஆன்-லைனில் தெரிவிக்கும் விவரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால், கூறப்படும் தகவல்கள் எதற்கும் ஆதாரங்களை இணைப்பதில்லை. விவரங்கள் பொய்யாக இருந்தால், காப்பீட்டிற்கு இழப்பீடு வேண்டி கோரிக்கை எழும்போது சிக்கல் ஏற்பட்டுவிடும். கொடுக்கப்படும் தகவல்கள் பொய்யாக இருக்கும் பட்சத்தில், இழப்பீட்டுத் தொகை கிடைக்காது,' என்றார்.

முதன்முறை:ஓரியண்டல், நேஷனல், நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா ஆகிய நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களில் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் தான் இப்புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

மருத்துவ காப்பீடு:மருத்துவம், மோட்டார், தீ, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெறும் காப்பீடு, தொழிற்சாலைகள் காப்பீடு, பயணக் காப்பீடு போன்ற பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அளிக்கிறது. இதற்கான காப்பீடுகளை இதுவரை அலுவலகங்கள் மூலம் செய்து வந்தனர். விண்ணப்பம்:தற்போது, விரைவாகக் காப்பீட்டைச் செய்யவும், அதற்கான செலவுகளைக் குறைக்கும் வகையிலும் ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் காப்பீடு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.காப்பீடு செய்ய விரும்புபவர்கள், இந்த இயந்திரம் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். ஏ.டி.எம்., இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.