A+ A-

ஸ்மார்ட்போன்களுக்கு துணை பேட்டரிகளை வழங்கும் சோனி

மொபைல் மற்றும் டேப்லெட்டுகளுக்கான உதிரி பாகங்களையும் சோனி தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மொபைல் மற்றும் டேப்லெட்டுகளுக்கான எக்ஸ்டர்னல் பேட்டரி பேக்குகளை சோனி தயாரித்து களமிறக்க இருக்கிறது. இந்த பேட்டரி 3,500 முதல் 7,000 வரையிலான மெகா ஹெர்ட்சை கொண்டிருக்கும்.

இந்த பேட்டரி பேக்குகள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுகளுக்கு துணை பேட்டரிகளாக இருந்து செயல்படும். குறிப்பாக பயணத்தில் இருக்கும் போது சார்ஜ் தீர்ந்துவிட்டால் இந்த பேட்டரி பேக்குகளைப் பயன்படுத்தலாம்.
இந்த பேட்டரி பேக்குகள் சோனியின் லேமினேட் தொழில் நுட்பத்துடன் வருகிறது. இதன் 7, மெகா ஹெர்ட்ஸ் கொண்ட பேட்டரி பேக்கின் மூலம் ஒரு ஸ்மார்ட் போனுக்கு மூன்று முறை முழு சார்ஜ் கொடுக்க முடியும்.
மிகவும் சிறியதாக இருக்கும் இந்த பேட்டரி பேக்குகளை சட்டை பைகளுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் இதை மிக எளிதில் எடுத்துச் செல்லவும் முடியும். மேலும் இதை 500 முறை ரிசார்ஜ் செய்ய முடியும்.
இந்த பேட்டரி பேக்குகளை பலவகையான வண்ணங்களில் சோனி களமிறக்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பேட்டரிகள் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. மேலும் இவற்றின் விலை 30 முதல் 90 வரையிலான அமெரிக்க டாலர்களுக்குள் இந்திய மதிப்பில் ரூ.1,700 முதல் ரூ.4,800 வரை இருக்கும் என்று தெரிகிறது.