A+ A-

வாடிக்கையாளர்களிடன் மன்னிப்பு கோரும் ஆப்பிள்


கடந்த வாரம் ஆப்பிள் தனது ஐஒஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு வரைபடத்தை களமிறக்கி இருந்தது. ஆனால் அந்த வரைபடத்தில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததால் ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.


தனது வாடிக்கையாளர்களின் உணர்வுகளைக் கண்டறிந்த ஆப்பிளின் தலைமை இயக்குனர் டிம் குக் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். மேலும் புதிய வரைபடத்தில் உள்ள குழப்பங்களுக்காக வருந்துவதாகவும் அவர் அறிக்கை கொடத்திருக்கிறார்.
மன்னிப்பு கேட்பது என்பது ஆப்பிளைப் பொறுத்தவரை அது எப்போதாவதுதான் நடக்கும். ஆனால் இந்த புதிய வரைபடத்தில் தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவை துல்லியமாக இல்லாததால், மற்ற நிறுவனங்கள் ஆப்பிளை விமர்சனம் செய்தன.
ஆகவே தனது வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து விடக்கூடாது என்பதற்காக ஆப்பிள் முன்னெச்சரிக்கையாக இந்த மன்னிப்பை தனது ரசிகர்களிடம் கோரியிருக்கிறது. ரசிகர்கள் மன்னிப்பார்கள் என்று நம்புவோம்.