A+ A-

50 மில்லியன் எக்ஸ்பீரியா போன்களை 2013ல் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கும் சோனி


Sony Make Believe
2012 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் மொபைல் நிறுவனங்கள் தற்போது அடுத்த புதிய ஆண்டிற்கான புதிய திட்டங்கள் மற்றும் இலக்குகளை தீட்ட ஆரம்பித்திருக்கின்றன.
அந்த வகையில் சோனி நிறுவனம் வரும் 2013 ஆம் ஆண்டில் 50 மில்லியன் சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய இலக்கு வைத்திருக்கிறது. மேலும் சோனி தனது எக்ஸ்பீரிய டி மற்றும் எக்ஸ்பீரியா டிஎல் ஆகிய போன்களின் விற்பனையை பெரிதும் நம்பியிருக்கிறது.
ஏனெனில் இந்த போன்களில் புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்கைபால் உள்ளது. மேலும் இந்த போன்களின் விலையை சோனி கணிசமான அளவில் குறைத்திருக்கிறது.
இந்த 2012ல் மட்டும் 35 மில்லியன் எக்ஸ்பீரியா போன்களை விற்று சாதனை படைத்தது சோனி. எனவே தற்போது 50 மில்லியன் போன்களின் விற்பனையை புதிய ஆண்டில் இலக்காக வைத்திருக்கிறது. சோனியின் கனவு பலிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.