A+ A-

புதிய டைம்லைனுடன் ‘ஃப்ரென்ஷிப் பக்கத்தினை’ அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்!


Facebook Friendship Pages Converted To New Timeline with Enhanced Features
சமீபத்தில் தான் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் டைம்லைன் பக்கத்தில் சில மாற்றங்களை செய்யப்போவதாக தகவல்களை பார்த்தோம். அந்த வகையில் ஃபேஸ்புக் பக்கம் நட்பினை முதன்மைப்படுத்தி காட்டும் வகையில் புதிதாக வடிவமைக்கப்படுகிறது.
இனிமேல் இந்த ஃபேஸ்புக் ஃப்ரென்ஷிப் பக்கம் 2 நபர்களது வரலாற்றினை காட்டும். உதாரணத்திற்கு, நமது பக்கத்தில் விவரங்களை பார்க்கும் அதே சமயம், நமது நெருங்கிய நண்பரது பக்கத்தினை ஒரே பக்கத்தில் பார்க்கலாம். இப்படி ஒரு புதிய யுக்தியை கண்டுபிடித்து, ஏற்கனவே ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடும் நண்பர்கள் வட்டாரத்தினை இன்னும் ஈர்க்க தயாராகிறது ஃபேஸ்புக்.

எல்லோருக்குமே ஆயிரம் நண்பர்கள் இருப்பினும், குறிப்பாக ஒரு நண்பரிடம் மட்டும் ரகசியங்களை பகிர்ந்து கொள்வது அனைவரும் அறிந்த விஷயம் தான். அந்த வகையில் நெருங்கிய நண்பரை அனைவரின் முன்பும் அறிமுகம் செய்து வைக்க அனைவருக்கும் ஆசை இருக்கும் தான்.
அந்த ஆசையை இனி ஃபேஸ்புக் புதிதாக டைம்லைன் வசதியுடன் அறிமுகம் செய்திருக்கும் இந்த ஃப்ரென்ஷிப் பக்கத்தில் நிறைவேற்றி கொள்ளலாம். மக்களின் மனம் தெரிந்து புதிய வசதிகளை வழங்கி வரும் ஃபேஸ்புக் சிகரத்தை தொடும் என்பதைவிட, சிகரத்தை தாண்டும் என்றும் கூட சொல்லத்தோன்றுகிறது.