A+ A-

இந்திய விலை விவரத்துடன் களமிறங்கும் நெக்சஸ்-7!


Google Nexus 7 may Hit the Indian stores on Nov 8
ஆசஸ் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து உருவாக்கியது நெக்சஸ்-7 டேப்லட். இந்த டேப்லட் இன்று எலக்ட்ரானிக் மார்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. எல்லாவிதமான உயர்ந்த தொழில் நுட்பம கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்ற நாடுகளில் சிறப்பாக விற்பனைக்கு வந்துவிடுகிறது.
நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் கொஞ்சம் தாமதமாக தான் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு வர்த்தக ரீதியில் சில காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த வகையில் கூகுள் மற்றும் ஆசஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த நெக்சஸ்-7 டேப்லட் சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்கும் என்று கருதப்படுகிறது.
பங்குசந்தையில் ஆப்பிளின் ஐபேட் மினி டேப்லட்டிற்கு 50 சதவிகிதம் பங்குகள் இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த நெக்சஸ்-7 டேப்லட் எந்த இடத்தினை பிடிக்கும் என்பதும், எவ்வளவு பங்குகளை கொண்டதாக இருக்கும் என்பதும் இன்னும் விடை தராத கேள்வியாக தான் இருக்கிறது.
7 இஞ்ச் திரை கொண்டிருக்கும் இந்த நெக்சஸ்-7 டேப்லட் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை  வழங்கும். ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இந்த டேப்லட் கொண்டிருக்கும். இதில் என்வீடியா டெக்ரா-3 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் ஆகிய வசதியினை பெறலாம்.
இதன் 1.2 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமரா சிறப்பாக செயல்படும் என்று நம்பப்பட்டாலும், இதில் மெயின் கேமரா இல்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கலாம்.
மேலும் இந்த டேப்லட் வைபை தொழில் நுட்ப வசதிக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். 340 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட், 9.5 மணி நேரம் பேக்கப் டைமினை அளிக்கும். நெக்சஸ்-7 டேப்லட் இன்று நமது நாட்டில் விற்பனைக்கு வரும் என்பது சந்தோஷமான செய்தி தான்.
இந்த டேப்லட்டின் விலை விவரத்தினையும் கொஞ்சம் பார்க்கலாம். இதன் 16 ஜிபி மெமரி வெர்ஷன் டேப்லட் ரூ. 19,990 விலையினை கொண்டதாக இருக்கும்.
நெக்சஸ்-7டேப்லட்:
ஆன்டார்ய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
7 இஞ்ச் திரை வசதி
1280 X 800 பிக்ஸல் திரை துல்லியம்
என்வீடியா டெக்ரா-3 பிராசஸர்
1 ஜிபி ரேம்
1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா
வைபை நெட்வொர்க் வசதி
340 கிராம் எடை கொண்டதாக இருக்கும்
இதன் விலை ரூ. 19,990