A+ A-

டெலிமார்க்கட்டிங் எஸ்எம்எஸ்களை எவ்வாறு தவிர்ப்பது?


மொபைல் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்த பிறகு, முறையாக பதிவு செய்யாத டெலி மார்க்கட்டிங் நிறுவனங்களிடமிருந்து ஏராளமான தேவையில்லாத எஸ்எம்எஸ்கள் வருகின்றன. இவை மொபைல் பயன்படுத்துபவர்களை மிகவும் சிரமத்துக்கும் மற்றும் தொந்தரவுக்கும் உள்ளாக்குகின்றன. அதனால் ஏராளமானோர் எரிச்சல் அடைகின்றனர்.
Mobile
இந்த தேவையில்லாத எஸ்எம்எஸ்களை எவ்வாறு நிறுத்துவது? தொலைத் தொடர்புத் துறையின் ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அதற்கான வழிமுறைகளை இங்கே கூறுகிறது.
முதலில் தினமும் வரும் இந்த வர்த்தக ரீதியிலான எஸ்எம்எஸ்களை நிறுத்துவதற்கு உரிமை உண்டு. அவர்கள் எந்த எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பினார்களோ அதே எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்து எஸ்எம்எஸ்களை நிறுத்துமாறு செய்யலாம்.
இரண்டாவதாத தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களும் ஒவ்வொரு 3 மாதமும் வர்த்தக ரீதியிலான எஸ்எம்எஸ்கள் ஒரே எண்ணுக்குச் செல்கின்றனவா என்று கண்காணிக்க வேண்டும்.
அடுத்ததாக இந்த எஸ்எம்எஸ்களை நிறுத்த வேண்டி அன்சொலிசிட்டட் கமர்சியல் கம்யூனிகேசனுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி புகார் தெரிவிக்கலாம். இது மிகவும் எளிதானது. அதாவது யுசிசி என்று டைப் செய்து பின் புகாரையும் டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்தால் போதுமானது.
இதன் மூலம் இந்த புகார் யுசிசி மற்றும் தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனத்திற்கும் செல்லும்.
அதுபோல் டெலிமார்க்கெட்டிங் நடத்தும் நிறுவனங்கள் மொபைல்களைப் பயன்படுத்துவோரத் தவறாகப் பயன்படுத்துக் கூடாது என்பதற்காக, தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் எஸ்எம்எஸ்கள் அனுப்பி அவர்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்ய வேண்டும்.
மேலும் புதிய வாடிக்கையாளர் தொலைத் தொடர்பு சேவையைப் பெறும் போது அந்த நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு எந்த டெலிமார்க்கட்டிங்கிற்காக சிம்கார்டை பயன்படுத்தக்கூடாது என்ற உறுதிமொழியையும் வாங்க வேண்டும்.
இவ்வாறு ட்ராய் ஆலோசனை வழங்குகிறது. எனினும் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒருமுறை தனக்கு டெலிமார்க்கட்டிங் எஸ்எம்எஸ்கள் வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்திருக்கிறார்.

மொபைல் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்த பிறகு, முறையாக பதிவு செய்யாத டெலி மார்க்கட்டிங் நிறுவனங்களிடமிருந்து ஏராளமான தேவையில்லாத எஸ்எம்எஸ்கள் வருகின்றன. இவை மொபைல் பயன்படுத்துபவர்களை மிகவும் சிரமத்துக்கும் மற்றும் தொந்தரவுக்கும் உள்ளாக்குகின்றன. அதனால் ஏராளமானோர் எரிச்சல் அடைகின்றனர்.