A+ A-

விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு ஜோடி சேரும் வியூவ்சோனிக் புதிய மானிட்டர்


Viewsonic Monitor
வியூவ்சோனிக் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஒரு புதிய டச் வசதி கொண்ட பேக்லிட் எல்இடி டிஸ்ப்ளேயை அறிமுக் செய்து வைத்திருக்கிறது. 22 இன்ச் அளவு கொண்ட இந்த மானிட்டருக்கு வியூவ்சோனிக் டிடி2220 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய மானிட்டர் விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு சரியான ஜோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக அகன்ற திரையில் வரும் இந்த புதிய மானிட்டர் ரூ.16,999க்கு விற்கப்பட இருக்கிறது. மேலும் இந்த மானிட்டர் 3 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இந்த மானிட்டரில் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. குறிப்பாக இந்த மானிட்டரில் நவீன டூவல் பாயிண்ட் ஆப்டிக்கல் தொழில் நுட்பம் உள்ளது. அதனால் இந்த மானிட்டரில் எளிதாக கீறல்கள் விழாது. மேலும் இது மிகவும் உறுதியாக இருக்கும். அதனால் நீடித்து உழைக்கும் என்று நம்பலாம்.
இந்த மானிட்டர் 1920×1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. அதனால் இந்த மானிட்டரில் வரும் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் மல்டி மீடியா கண்டன்டுகள் ஆகியவை மிகவும் துல்லியமாக மற்றும் தெளிவாக இருக்கும். இந்த மானிட்டர் தூசியினால் எளிதில் பாதிப்பு அடையாது. மேலும் இந்த மானிட்டரை விரல்களால் இயக்கலாம். அதுபோல் கைகளில் உறைகளை அணிந்தும் இந்த மானிட்டரை இயக்கலாம்.
இந்த மானிட்டர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டிருப்பதால் இது எஸ்ஆர்எஸ் பிரீமியம் சவுண்டை வழங்கும். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய இயங்குதளங்களுக்கு இந்த மானிட்டர் மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த மானிட்டர் 2 யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டிருப்பதால் இதில் மவுஸ் மற்றும் கீபோர்டு ஆகியவற்றையும் இணைத்துக் கொள்ளலாம்.

வியூவ்சோனிக் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஒரு புதிய டச் வசதி கொண்ட பேக்லிட் எல்இடி டிஸ்ப்ளேயை அறிமுக் செய்து வைத்திருக்கிறது. 22 இன்ச் அளவு கொண்ட இந்த மானிட்டருக்கு வியூவ்சோனிக் டிடி2220 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய மானிட்டர் விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு சரியான ஜோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக அகன்ற திரையில் வரும் இந்த புதிய மானிட்டர் ரூ.16,999க்கு விற்கப்பட இருக்கிறது. மேலும் இந்த மானிட்டர் 3 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இந்த மானிட்டரில் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. குறிப்பாக இந்த மானிட்டரில் நவீன டூவல் பாயிண்ட் ஆப்டிக்கல் தொழில் நுட்பம் உள்ளது. அதனால் இந்த மானிட்டரில் எளிதாக கீறல்கள் விழாது. மேலும் இது மிகவும் உறுதியாக இருக்கும். அதனால் நீடித்து உழைக்கும் என்று நம்பலாம்.