முதன் முறையாக குறைந்த விலையில் அனைவராலும் கொள்வனவு செய்யக்கூடிய Tablet ஒன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Android 4.0 Icecream Sandwich இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Aakash 2 Tablet - இன் பெறுமதி இந்திய ரூபாய் மதிப்பில் 1,130 மட்டுமே ஆகும்.
இந்த Tablet ஆனது Cortex A8 தொழில்நுட்பத்தில் அமைந்ததும் 1GHz வேகத்தில் செயலாற்றக்கூடியதுமான Processor - இனை கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 512MB அளவுடைய RAM - இனையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
மேலும் இதன் தொடுதிரையானது 7 அங்குலமுடையதாகவும், துணைச்சேமிப்பு கொள்ளளவானது 4Gb ஆகக்காணப்படுவதுடன் இதனை microSD கார்ட்கள் மூலம தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்துக் கொள்ளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மின்கலமானது 3,000 mAh மின்னோட்டத்தினை வழங்கக்கூடியதாகவும் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
கருத்துரையிடுக