A+ A-

உயிரினங்கள் வாழ தகுதியுடைய புதிய கிரகம் கண்டுபிடிப்பு


பூமியை விட 7 மடங்கு மிகப்பெரிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விண்வெளியில் எச்.டி. 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றியுள்ள 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த புதிய கிரகங்கள் பூமியை போன்று மனிதர்கள் வாழ தகுதியுடையன எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது பூமியை விட 7 மடங்கு பெரியது. இதுமட்டுமல்லாமல் பூமியை போன்ற தட்பவெப்பநிலையும், திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளது.
இதனால் இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைகழக விஞ்ஞானி மிக்கோ துயோன தெரிவித்துள்ளார்.