A+ A-

ஜுன் ௧௧(11) ௧௯௯௫(1995) தமிழ்தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு தினம்


பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, 1 995 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர்.

தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 

தமிழரசன் போன்ற தமிழ்தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றபடுகிறது. தமிழ்தேசிய தந்தையாக இன்று தமிழர்களால் போற்றபடுகிறார்

வரலாறு

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பெற்றவர்.

கல்வி

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னும் பெயரில் கையெயழுத்து ஏடு தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

நூல்கள்:

அறுபருவத் திருக்கூத்து

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

இட்ட சாவம் முட்டியது

இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?

இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்

இளமை உணர்வுகள்

இளமை விடியல்

உலகியல் நூறு

எண் சுவை எண்பது

ஐயை (பாவியம்)

ஓ! ஓ! தமிழர்களே

கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்

கழுதை அழுத கதை

கனிச்சாறு (எட்டு பாடற்தொகுதிகள்)

கொய்யாக் கனி (பாவியம்)

சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்

சாதி ஒழிப்பு

செயலும் செயல்திறனும்

தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

தன்னுணர்வு

தமிழீழம்

திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-1

திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2

திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3

திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4

நமக்குள் நாம்....

நூறாசிரியம்

நெருப்பாற்றில் எதிர் நீச்சல்

பள்ளிப் பறவைகள்

பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2

பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)

பாவேந்தர் பாரதிதாசன்

பெரியார்

மகபுகுவஞ்சி

மொழி ஞாயிறு பாவாணர்

வாழ்வியல் முப்பது

வேண்டும் விடுதலை

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 


1774 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

1788 - ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.

1805 - மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1837 - பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.

1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.

1935 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.

1937 - சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1938 - இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: ஜப்பானியப் படைகளை எதிர் கொள்ள சீன அரசு மஞ்சள் ஆற்றை பெருக்கெடுக்க விட்டதில் 500,000 முதல் 900,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் இத்தாலியில் ஜெனோவா மற்றும் டூரின் நகர்கள் மீது குண்டுகளை வீசின.

1940 - இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.

1963 - தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.

1981 - ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.

2002 - அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.

2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.

2007 - கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1838 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1898)

1908 - சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (இ. 1975)

1947 - லாலு பிரசாத் யாதவ், இந்திய அரசியல்வாதி

1957 - சுகுமாரன், தமிழகக் கவிஞர்

இன்று மறைந்த பிரபலங்கள் 


1994 - அ. துரைராசா, பேராசிரியர், நாட்டுப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1934)

1993 - லெப்டினண்ட் கேணல் சாள்ஸ், கடற்புலிகளின் தாக்குதற் படைத் தளபதியான ஆனந்தராசா தவராஜா (பி. 1960)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, 1 995 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான்.