A+ A-

உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் கஞ்சன்சங்கா மலை

Kangchenjunga

கஞ்சன்சங்கா (Kangchenjunga, நேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā), உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ.

இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.

கஞ்சன் ஜங்கா என்பது பனியின் ஐந்து புதையல்கள் என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.

1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கஞ்சன்சங்கா (Kangchenjunga, நேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā), உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ.