A+ A-

ஜுன் ௨௪ (24) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் கண்ணதாசனின் பிறந்த (பி. 1927) தினம்

ஜுன் ௨௪ (24)  தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் கண்ணதாசனின் பிறந்த (பி. 1927) தினம்


கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர்.

ஜுன் ௨௪ (24)  தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் கண்ணதாசனின் பிறந்த (பி. 1927) தினம்

சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.

 இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
ஜுன் ௨௪ (24)  தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் கண்ணதாசனின் பிறந்த (பி. 1927) தினம்

 கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாள்களிலேயே காரைக்குடியில் முகாமிட்டு இருந்த என்.எஸ்.கே. நாடகக் கம்பெனியின் நடிகையான பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் பிறந்தன.

 ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் பிறந்தார்.

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[6] அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது.

இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

படைப்புகள்

இயேசு காவியம்

அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)

திரைப்படப் பாடல்கள்

மாங்கனி

கவிதை நூல்கள்

கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில் * பாடிக்கொடுத்த மங்களங்கள் * கவிதாஞ்சலி * தாய்ப்பாவை* ஸ்ரீகிருஷ்ண கவசம்

அவளுக்கு ஒரு பாடல்
சுருதி சேராத ராகங்கள்
முற்றுப்பெறாத காவியங்கள்
பஜகோவிந்தம்
கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்

அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள்
சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
அத்வைத ரகசியம்
பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்

எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கட்டுரைகள்

கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
தாயகங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்

நாடகங்கள்

அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை

இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 


1314 - ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.

1340 - நூறாண்டுகள் போர்: மூன்றாம் எட்வேர்ட் தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.

1509 - எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1571 - மணிலா நகரம் அமைக்கப்பட்டது.

1597 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் முதலாவது தொகுதியினர் ஜாவாவின் பாண்டாம் நகரை அடைந்தனர்.

1662 - மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.

1664 - நியூ ஜேர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது.

1812 - ரஷ்யாவினுள் ஊடுரும் முயற்சியில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்தனர்.

1849 - அமெரிக்கப் பெண்மணியான எலிசபெத் பிளாக்வெல் என்பவரே அமெரிக்காவில் முதன் முதலாக மருத்தவப் பட்டம் பெற்ற பெண்மணியாவார். அவர் இப்பட்டத்தினை 1849 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.

1859 - சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.

1860 - புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.

1894 - பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.

1932 - சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.

1938 - 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.

1940 - பிரான்சும் இத்தாலியும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1945 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியரை வெற்றி கொண்ட சோவியத் படைகளின் வெற்றி அணிவகுப்பு மொஸ்கோவில் இடம்பெற்றது.

1948 - சோவியத் ஒன்றியம் ஜெர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.

1956 - சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

1963 - சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சி வழங்கப்பட்டது.

1975 - அமெரிக்க விமானம் நியூயோர்க்கில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

1981 - 17 ஆண்டுகளாக உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்த ஹம்பர் பாலம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.

1983 - அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீராங்கனை சாலி ரைட் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பினார்.

1997 - ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

2002 - தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் கொல்லப்பட்டனர்.

2004 - நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக்கப்படட்து.

2007 - கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1883 - விக்டர் ஹெஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1964)

1907 - கா. அப்பாத்துரை, தமிழறிஞர் (இ. 1989)

1915 - ஃபிரெட் ஹாயில், அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்ந்த வானியல் அறிவியலாளர் (இ. 2001)

1928 - எம். எஸ். விஸ்வநாதன், தென்னிந்திய இசையமைப்பாளர்

1938 - நீல. பத்மநாபன், எழுத்தாளர்

இன்று மறைந்த பிரபலங்கள் 


1908 - குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (பி. 1837)

2006 - சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், மணிக்கொடி எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பி. 1910)

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்