A+ A-

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம் இன்று..

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம் இன்று..

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும்.

இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச் சபையின் சார்பில் இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

இந்த தினம் கொண்டாடுவதன் நோக்கம் .

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும்,வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் பங்கு என்ன?

சுற்றுச்சூழல்...

இது நீங்களும், நானும், இன்ன பிற உயிர்களும் வாழத் தேவையான முக்கியமான நாடி. நிலம், நீர், காற்று, வெளி, நெருப்பு, உணவுச் சுழற்சி, வன உயிர்கள், விவசாயம், பருவ நிலை ஆகியவை வலையைப்போல சுற்றுச்சூழலில் பிணைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் எந்த ஒரு கன்னி அற்றுப்போனாலும், அது நமக்கும். நம்மைச் சார்ந்த, சாராத உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும்.

நம் முன்னோர்கள் பாதுகாத்ததனால்தான் இன்று நமக்கு இயற்கை மிச்சம் வைத்திருக்கிறது. இன்று இருப்பதை நாம் பாதுகாத்தால் தான், நம் அடுத்த தலைமுறைக்கு எதையேனும் மிச்சம்வைக்க முடியும். ஆகவே, சுத்தமான நீர், சுத்தமான காற்று, சுத்தமான நிலம் ஆகியவற்றைப் பராமரிப்பது அனைவரின் பொறுப்பு

மேலும் இந்த நாளில் நடந்தவை :

1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1974 - பொன். சிவகுமாரன் (படம்) உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.


1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

சுற்றுச்சூழல்... இது நீங்களும், நானும், இன்ன பிற உயிர்களும் வாழத் தேவையான முக்கியமான நாடி. நிலம், நீர், காற்று, வெளி, நெருப்பு, உணவுச் சுழற்சி, வன உயிர்கள், விவசாயம், பருவ நிலை ஆகியவை வலையைப்போல சுற்றுச்சூழலில் பிணைக்கப்பட்டுஇருக்கிறது. இவற்றில் எந்த ஒரு கன்னி அற்றுப்போனாலும், அது நமக்கும். நம்மைச் சார்ந்த, சாராத உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும்.