A+ A-

ஜுன் ௧௬(16) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சித்தரஞ்சன் தாஸ் மறைவு தினம்..

ஜுன் ௧௬(16) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சித்தரஞ்சன் தாஸ் மறைவு தினம்..

சித்தரஞ்சன் தாஸ் (வங்காள மொழி:চিত্তরঞ্জন দাস) (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.

சித்தரஞ்சன் தாஸ் சித்தரஞ்சன் தாஸ் "தேச பந்து" என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர்.

அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர்.

பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்

1870- ஆம் ஆண்டு நவம்பர் 5- ஆம் நாள் வங்காளத்தில் டாக்கா மாவட்டம் விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோஹன் தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.

பூபன் தாஸ் சிறந்த அறிவாளி. பிரம்ம சமாஜத்தில் தீவிர நம்பிக்கை உடையவர். மிகுந்த நாட்டுப் பற்று உடையவர். சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப் பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே காரணம். சித்தரஞ்சன் தாஸ் அவரது முதல் மகன். 

அவருக்கு ஒரு தமக்கை உண்டு. சித்தரஞ்சன் தாஸ் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் 1890-இல் இங்கிலாந்து சென்று ICS தேர்வு எழுதினார். இந்தியா திரும்பி 1894-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். 

அவரது இளைய சகோதரர் பி. ஆர். தாஸ் பாட்னா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். வங்கப்பிரிவினையின்போது அரவிந்தர், பிபின் சந்த்ர பாலுடன் இணைந்து "வந்தே மாதரம்" என்ற ஆங்கில இதழில் எழுதி வந்தார்.

1923-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி காந்திஜியை எதிர்த்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால் சுயராஜ்ஜியக் கட்சி துவங்கப்பட்டது. 

இதில் முக்கியமானவர்கள் சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு(ஜவஹர்லால் நேருவின் தந்தை), நரசிம்ம சிந்தாமன் கேல்கர்( கேல்கர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாலகங்காதரத் திலகருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர்.1910-ஆம் ஆண்டிலிருந்து 1932-ஆம் ஆண்டு வரை "கேசரி" இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார்.), ஹூசேன் சாஹித் ஜராவார்டி(பின்னாளில் பாகிஸ்தான் பிரதமராகப் பணிபுரிந்தார்), நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், விதால்பாய் படேல்( வல்லபாய் படேலின் மூத்த சகோதரர். 

இவரும் அமிதவாதப் போக்கு உடையவர். 1923-ஆம் ஆண்டு மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும், 1925-ஆம் ஆண்டு சபாநாயகராகவும் விளங்கினார். 

சுபாஷ் சந்திர போஸின் தேசப்பணிகளால் கவரப்பட்ட விதால்பாய் படேல் அவரது ரூ.1,20,000 மதிப்புடைய சொத்தை போஸின் தேசப்பணிகளுக்காகக் கொடுத்தார். 

ஆனால் காந்திஜி அந்தத் தொகையை காங்கிரஸ் கட்சியின் விருப்பத்திற்கேற்பதான் செலவிட வேண்டும் என்றார். போஸ் மறுத்ததால் வழக்கு நீதிமன்றம் சென்றது. உயில் தெளிவாக இல்லாததால் போஸ் அந்தத் தொகையை இழந்தார்.

 இவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்தில் அரசாங்கத்தின் நியாயமற்ற கொள்கைகளை எதிர்க்க நினைத்தார்கள். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலிருந்து சுதந்திரம் பெற்று சுயராஜ்ஜியம் அமைப்பதே இவர்கள் குறிக்கோள் ஆகும். 

சித்தரஞ்சன் தாஸ் "ஃபார்வார்டு" என்ற பத்திரிக்கை ஆரம்பித்து சுபாஷ் சந்திர போஸிடம் ஒப்படைத்தார். 1924-ஆம் ஆண்டு நடைபெற்ற கல்கத்தா மாநகராட்சி தேர்தலில் சுயராஜ்ஜியக்கட்சி வெற்றி பெற்றது.

 மாநகராட்சி மேயராக சித்தரஞ்சன் தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக சுபாஷ் சந்திர போஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்கத்தா மாநகராட்சியில் பல சீர்திருத்தங்களைச் செய்து மக்களிடம் பேராதரவைப் பெற்றனர். சிறந்த செயல்பாட்டால் 1925-ஆம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1925-ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று டார்ஜிலிங்கில் தனது 55-ஆவது வயதில் இறந்தார். அவரது உடல் கல்கத்தாவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டு மைல் நீளத்திற்கு மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர். 

தாகூர் சித்தரஞ்சன் தாஸைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அவரது தியாகமும் ஆக்கசக்தியும் நம்மை வழிநடத்தும் என்று கூறுகிறார். அவரது தாராள குணம் நினைத்துப் போற்றத்தக்கது.

 அவரது இல்லம் "சித்தரஞ்சன் சேவாசதன்" என்ற பெயரில் மருத்துவமனையாகச் செயல்படுகிறது. இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.

மேற்கு வங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த இவர் 1919-1922 காலப் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானியரின் ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார். மோதிலால் நேருவுடன் இணைந்து சுயாட்சிக் கட்சியை ஆரம்பித்தார்.


சில நிகழ்வுகள் இந்நாளில் 


 தென்னாபிரிக்கா - இளைஞர் நாள் (1976)
  1745 - பிரித்தானியர் கேப் பிறெட்டன் தீவை பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது கனடாவின் ஒரு பகுதியாகும்.

1779 - ஸ்பெயின் பெரிய பிரித்தானியாமீது போரை அறிவித்தது. கிப்ரால்ட்டர் மீதான முற்றுகை ஆரம்பமானது.

1819 - குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.

1883 - இங்கிலாந்தில் விக்டோரியா அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1897 - ஹவாய்க் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

1911 - விஸ்கொன்சின் மாநிலத்தில் 772 கிராம் விண்கல் வீழ்ந்ததில் களஞ்சியம் ஒன்று சேதமடைந்தது.

1940 - லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.

1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.

1976 - தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

1964 - லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.

1983 - யூரி அந்திரோப்பொவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.

1994 - சீன விமானம் TU-154 புறப்பட்டுப் 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நாளில் பிறந்த பிரபலங்கள்


1971 - டூபாக் ஷகூர், அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர்

சித்தரஞ்சன் தாஸ் (வங்காள மொழி:চিত্তরঞ্জন দাস) (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர். சித்தரஞ்சன் தாஸ் சித்தரஞ்சன் தாஸ் "தேச பந்து" என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர்.