A+ A-

ஜுன் ௧௦(10) ௧௭௮௬(1786)டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் இறந்தனர்


1786 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் இறந்தனர்

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 


1190 - மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.

1838 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேய குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1846 - கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.

1886 - நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேஎர் கொல்லப்பட்டனர்.

1898 - அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: நோர்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.

1944 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.

1945 - ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.

1956 - இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1967 - இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1984 - தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக
இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.

1986 - யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 - இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.

1996 - வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1998 - முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.

1999 - கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.

2003 - நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.


2006 - ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1925 - வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி

1971 - பாபி ஜிண்டல், அமெரிக்கா, லூசியானாவின் ஆளுனர்

இன்று மறைந்த பிரபலங்கள் 


கிமு 323 - மகா அலெக்சாண்டர் (பி. கிமு 356)

1836 - அன்ட்ரே-மரீ அம்பியர், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1775)

2004 - ரே சார்ல்ஸ், அமெரிக்க இசைக்கலைஞர் (பி. 1930)

1786 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் இறந்தனர் மேலும் சில நிகழ்வுகள் இந்நாளில் 1190 - மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.