A+ A-

சாம்சங் நிறுவனம் வெளியிடும் வளைந்த திரை ஸ்மார்ட்போன்

வளைந்த திரை கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த போன் அடுத்த மாதம் வெளியாகும் என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் திரை, பிளாஸ்டிக்கால் ஆனதாக இருக்கும் என்றும் சாம்சங் கூறியுள்ளது.

சியோல் நகரில் நடந்த கேலக்ஸி நோட் - 3 ஃபேப்லெட் வெளியிடும் நிகழ்வில் இந்தத் தகவலை சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஏற்கெனவே, வளைந்த திரை கொண்ட தொலைக்காட்சிகளை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் வெளியிடும் வளைந்த திரை ஸ்மார்ட்போன் போன் அடுத்த மாதம் வெளியாகும் என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் திரை, பிளாஸ்டிக்கால் ஆனதாக இருக்கும் என்றும் சாம்சங் கூறியுள்ளது.