A+ A-

திடீரென பல்வலி வந்தால், டாக்டரிடம் செல்லும் முன், வீட்டில் இருந்தபடி முதலுதவியாக என்னென்ன செய்யலாம்?

பொதுவாக உடலில் பல இடங்களில் வலி வந்தால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும். ஆனால் பல்வலி உண்டாக காரணம் சொத்தை மற்றும் ஈறுநோயை உண்டாக்கும் கிருமிகள்தான். 


இவை பற்களில் உள்ள நரம்புகளை அழுத்துவதால்தான் வலி வருகிறது. இதற்கு காரணமான கிருமிகளை அகற்றி, பல்லை அடைத்தல் அல்லது வேர் சிகிச்சை செய்தால்தான் வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். 

சில நேரங்களில் உடனடியாக மருத்துவரிடம் செல்ல முடியாத போது, நீங்கள் காய்ச்சல் தலைவலிக்கு சாப்பிடும் மாத்திரையை சாப்பிடலாம். இவற்றை மருத்துவரின் கண்காணிப்பின்றி அடிக்கடி சாப்பிடக் கூடாது. வீட்டில் கிராம்பு இருந்தால் அதை வலி ஏற்படும் இடத்தில் வைக்கலாம்.

 ஒரு சில மணி நேரங்களில் வலி குறையும். வாய்ப்புண்ணால் ஏற்படும் வலி வேறுவகையானது. இதற்கு மருந்து தேவை இல்லை. வீட்டில் உள்ள நெய் அல்லது வெண்ணெய் தடவலாம். 

வாய்ப்புண் ஒருவாரத்திற்கு மேல் சரியாகவில்லையென்றால் அல்லது வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் காட்ட வேண்டும். ஈறுகளில் வீக்கம் இருந்தால் கிருமி நாசினி கலந்த "மவுத்வாஷ்' உபயோகிக்கலாம். கூட ஈறுகளை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். ஒரு சில நாட்களுக்கு இதை செய்தால் ஈறுகளில் வீக்கமும், வலியும் குறையும். இப்பிரச்னைகள் அனைத்துக்கும் அதற்கான உரிய சிகிச்சை செய்யாதவரை வலி முழுமையாக நிற்காது. இவற்றை முதலுதவி போல செய்து விட்டு, பின் உரிய நேரத்தில் மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

நன்றி:தினமலர்

பொதுவாக உடலில் பல இடங்களில் வலி வந்தால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும். ஆனால் பல்வலி உண்டாக காரணம் சொத்தை மற்றும் ஈறுநோயை உண்டாக்கும் கிருமிகள்தான்.