A+ A-

பேராசை பெரும் நஷ்டம் ...!

 பேராசை பெரும் நஷ்டம் 

ஒரு ஊரில் தினேஷ் கிஷோர் என இரு நண்பர்கள் இருந்தார்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று ஒன்றாக திரும்பி வருவார்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் மிகவும் அன்பாக இருந்தார்கள்.

தினேஷின் அப்பா துணி வியாபாரம் செய்துவந்தார் கிஷோரின் அப்பா மளிகை கடை வைத்திருந்தார் அந்த கிராமத்திலேயே எல்லா பொருட்களும் அந்த மளிகை கடையில் மட்டுமே கிடைக்கும் அந்த ஊரில் வேறு கடையும் இல்லை அதனால் கிஷோரின் அப்பா எல்லா பொருட்களிலும் கலப்படம் செய்து விற்று வந்தார்.

அரிசி பருப்பு போன்றவற்றில் கள் மண் கலப்பது மட்டமான எண்ணையை சுத்தமான எண்ணெயுடன் கலந்து சுத்தமான எண்ணெய் என்று விற்பது இப்படி எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி கலப்படம் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தார்

இவையெல்லாவற்றையும் அறிந்தும் அந்த ஊர் மக்கள் வேறு வழியில்லாமல் அவருடைய கடையிலேயே பொருட்களை வாங்க வேண்டி இருந்தது தன் அப்பாவின் செயலை கிஷோர் தினம் தினேஷிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டான் .

தினேஷின் அப்பா மிகவும் நேர்மையானவர் அவர் துணி வியாபாரம் செய்துவந்தார் தரமான துணிகளை நியாயமான விலையில் விற்று நேர்மையாக வாழ்ந்து வந்தார் .கொஞ்சம் ஏழையாக இருந்தால் அவர்கள் கொடுக்கும் பணத்தை துணிக்கு பெற்றுக் கொள்வார்.அதனால் மக்களிடம் அவருக்கு ஊரில் மரியாதை அதிகம் .

கிஷோரின் அப்பாவுக்கு தினேஷ் அப்பாவைக் கண்டால் பிடிக்காது பக்கத்து வீடு வேறு வாழத் தெரியாதவன் உருப்பட மாட்டான் என ஏளனம் செய்வார்

சை.. இவன் முகத்தில் தினம் விழிக்க வேண்டி உள்ளதே என மனதிற்குள் முனகிக் கொள்வார்.

ஒரு நாள் நல் இரவு கிஷோரின் வீட்டில் திருடர்கள் புகுந்து கிஷோரின் அப்பாவை நன்கு அடித்து கட்டிப்போட்டு கலப்படமா செய்கிறாய் உனது பணத்தையெல்லாம் இல்லாமல் செய்கிறோம் பார் என்றுக் கூறி பணத்தையெல்லாம் அவசரமாக மூட்டை கட்டினர் அப்போது கிஷோர் அப்பாவின் அலறல் சத்தம் கேட்டு தினேஷின் அப்பா கையில் தடியோடு ஓடிவந்தார் .அவர்களை அடித்தார் திருடர்கள் கையில் இருந்த மூட்டையை பிடுங்கினார் பாதி பணம் மட்டும் கீழே விழுந்தது மீதி பணத்தை திருடர்கள் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

கிஷோரின் அப்பா உட்கார்ந்து அழ ஆரம்பித்தார் என் பணம் எல்லாம் திருடு போய்விட்டது பாதி பணம் தான் கிடைத்தது அது நேர்மையான பொருளுக்கானது.

நான் கலப்படம் செய்து பொருட்கள் விற்று ஊர் மக்களை ஏமாற்றினேன் கடவுள் அதற்கு தகுந்த தண்டனை கொடுத்துவிட்டார் இனி கலப்படம் செய்து பொருட்களை விற்க மாட்டேன் என சத்தியம் செய்தார் கொள்ளையடித்த பணம் கொள்ளையர்களிடம் சென்றுவிட்டது என மனதுக்குள் முனகினார்.

கிஷோரின் அப்பா அன்று முதல் மனம் திருந்தி தரமான பொருட்களை நியாய விலையில் விற்பனை செய்தார்

தினேஷ் அப்பாவும் கிஷோர் அப்பாவும் நண்பர்களாகினர் கிஷோரும் தினேஷும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் இருவரும் எப்பொழுதும் இணைபிரியாமல் அன்போடு வாழ்ந்து வந்தனர்.