A+ A-

செவ்வாய் கிரகத்தில் சத்தம்

 செவ்வாய் கிரகத்தில் சத்தம்  

செவ்வாய் கிரகத்தில் சத்தம்

நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். அதாவது நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது.

ரோவர் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர்

பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்ட சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்த சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாசா அமைப்பு வெளியிட்ட தகவலின்படி பெர்சவரன்ஸ் ரோவரில் இருகக்கும் லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லை தாக்கும் சத்தம் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் வெளிவந்த சத்தம் மூலம் அந்த கல் எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவரின் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள், அந்த கல் எதனால் ஆனது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.


நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது