A+ A-

இனி கூகுளுக்கு நீங்கள் வழி சொல்லலாம்

 Google Maps-இல் Drawing அம்சம்



கூகுள் மேப்ஸ் துல்லியமான வழிசெலுத்தலை வழங்கினாலும், சில நேரங்களில் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைய நீண்ட பாதையை தேர்வு செய்ய வேண்டியதாக இருக்கும்.

கூகுள் மேப்ஸ் சில புதிய அம்சங்கள்

அதாவது காணாமல் போன சாலைகளைச் சேர்க்கவும், தவறானவற்றை மறுவடிவமைக்கவும், மறுபெயரிடவும் அல்லது நீக்கவும் பயனர்களுக்கு உதவும் வகையில் இந்த தொழில்நுட்ப நிறுவனமானது அதன் 'மேப்ஸ் எடிட்டிங்' அனுபவத்தைஅப்டேட் செய்கிறது.

மைக்ரோசாப்ட் பெயின்ட்டில் காணப்படும் 'லைன்' டூலை பயன்படுத்துவதற்கு ஒத்ததாக “டிராயிங்” எனப்படும் புதிய அனுபவம் மேப்ஸ் எடிட்டிங்கில் இருப்பதாக ஒரு பிளாக் போஸ்ட் வழியாக கூகுள் கூறியுள்ளது. அந்த போஸ்டின் படி, அப்டேட் செய்யப்பட்ட இத டூல் வரும் மாதங்களில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளிவரும்.

தற்போது, ஒரு பயனர் காணாமல் போன சாலையைச் சேர்க்க முயற்சித்தால், அவர்கள் சாலை இருக்க வேண்டிய இடத்தில் 'பின் டிராப்' செய்ய வேண்டும் மற்றும் அந்த தகவலை Google இல் சமர்ப்பிக்க சாலையின் பெயரை டைப் செய்ய வேண்டும். இதேபோல் தேதிகள், திசைகள் போன்ற விவரங்களுடன் ஒரு சாலை மூடப்பட்டிருந்தால் அதைப்பற்றியும் பயனர்கள் புகாரளிக்கலாம்.

கூகுள் மேப்ஸ் துல்லியமான வழிசெலுத்தலை வழங்கினாலும், சில நேரங்களில் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைய நீண்ட பாதையை தேர்வு செய்ய வேண்டியதாக இருக்கும்.