A+ A-

2014ல் செவ்வாய்க்கு சந்திராயன்-2 செயற்கை கோளை ஏவ இஸ்ரோ நடவடிக்கை

சந்திராயன்-2 செயற்கைக் கோளை செவ்வாய் கிரகத்திற்கு ஏவுவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் நடை பெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், வரும் 2014 ம் ஆண்டில் சந்திராயன்-2 செயற்கைக் கோள் செவ்வாய்க்கு ஏவப்படும்.

அதற்கான ஆயத்தப் பணிகளை விஞ்ஞானிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
சந்திராயன்-1 முழுக்க முழுக்க இந்தியாவின் தயாரிப்பில் உருவானது என்றும், அதே போன்று இப்போது சந்திராயன் 2 ம் உருவாகும் என கூறினார்.

வரும் பெப்ரவரி மாதத்தில், பிஎஸ்எல்வி சி 20 செயற்கைகோளும் ஜிஎஸ்எல்வி டி 5 செயற்கைகோளும் ஏவப்படும் என்றும் அதோடு செவ்வாய் கிரகத்தை சுற்றி ஆய்வு செய்யும் செயற்கைகோளும் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.